The biography of Prophet Muhammad – Month 1

Admin August 26, 2022 No Comments

The biography of Prophet Muhammad – Month 1

Mahabba Campaign Part-1/365

மக்காவின் உயர் குடும்பம் குரைஷ். அந்தக் குடும்பத்துத் தலைவர்களில் முக்கியமானவரான அப்துல் முத்தலிபின் பதின்மூன்று ஆண் மக்களில் ஒருவர் அப்துல்லாஹ்.

அழகும், அறிவும், ஆற்றலும் பெற்ற இளைஞர். எப்பொழுதும் தந்தையுடன் தான் இருப்பார். குடும்பத்தினரைப் போலவே மக்காவாசிகளும் அவரை மிக நேசித்தனர். அனாச்சாரங்களில் மூழ்கிக் கிடந்த சமூகத்தில் அப்துல்லாஹ் தனித்து நின்றார்கள். மக்கள் மூடநம்பிக்கைகளுக்கு அடிமைப்பட்டு கிடந்த காலத்தில் அப்துல்லாஹ் அவற்றிலிருந்து விலகி நடந்தார்கள்.

மக்காவின் பெண்கள் இந்த இளைஞனுக்காக தவம் கிடந்தனர். சிலர் தங்களது விருப்பத்தைச் சொல்லி அனுப்பினர். சிலர் நேரடியாகவே தெரிவித்தனர். சில உயர் குலப் பெண்கள் கவர்ச்சியான வாக்குறுதிகளோடு தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தினர். ஆனால் அப்துல்லாஹ் யாருடைய வலையிலும் விழவில்லை.

அப்துல்லாஹ் திருமண வயதை அடைந்தபோது நாட்டு வழக்கப்படி குடும்பத்தினர் மணமகளுக்கான தேடலைத் துவங்கினர். நல்லதொரு ஆலோசனை வந்தது. செல்வாக்கு மிகுந்த வஹபுடைய மகள் ஆமினா. எல்லாவிதத்திலும் அப்துல்லாஹ்வுக்குப் பொருத்தமான பெண். குடும்பத்தினருக்கும் பெண்ணைப் பிடித்தது. திருமணம் முடிவானது.

எல்லோரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திய திருமணம். அங்குள்ள வழக்கத்துக்கு மாறாக மிகவும் அழகிய முறையில் திருமணம் நடந்தது. இசையோ, ஆரவாரமோ இன்றி மிக அமைதியாக நடந்த திருமணம். மணமக்களுடைய குடும்பத்தினர் கலந்துக் கொண்டு அன்பையும், மகிழ்வையும் பரிமாறிக் கொண்டனர். திருமணம் இனிதே நிறைவு பெற்றது.

அப்துல்லாஹ் – ஆமினா தம்பதியரின் திருமண வாழ்வு மக்கா முழுவதும் மகிழ்ச்சியை பரவச் செய்தது. இணை பிரியா புறாக்களை போன்ற அவர்களது வாழ்க்கை சிலருக்கு பொறாமையையும் தந்தது. தெவிட்டாத தேனைப் போல இனித்த வாழ்க்கையின் நாட்கள் வேகமாகக் கடந்துச் சென்றன. ஆமினா கர்ப்பமானார்கள்.

மக்காவின் வியாபாரக் குழு வெளியூர்களுக்குப் பயணம் செய்யும் காலம் வந்தது. அப்துல்லாஹ்வும் வியாபாரக் குழுவில் இணைந்து தனது அன்பு மனைவியிடம் பிரியா விடை பெற்றுப் பயணம் மேற்கொண்டார்கள்.

விதிக்குச் சில நிர்ணயங்கள் உண்டு, விதி கர்த்தாவான இறைவனே அதில் முழு அதிகாரம் பெற்றவன். அதை யாராலும் மாற்றவோ, தடுக்கவோ முடியாது.

வர்த்தகத்தை முடித்துக் கொண்டு திரும்பி வரும் வழியில் மதினாவில் (அப்போதைய யத்ரிப்) வைத்து அப்துல்லாஹ் நோய்வாய்ப்பட்டார்கள். தொடர்ந்து அங்கேயே மரணமடைந்தார்கள். தகவலறிந்த மனைவி மனைமுடைந்து போனார்கள். இறை விதியைப் பொருந்திக் கொண்டு, அன்புக் கணவன் தந்த காதல் பரிசான கர்ப்பத்தை சுமந்துக் கொண்டு காத்திருந்தார்கள்.

கி.பி 571 ஏப்ரல் 20 திங்கட்கிழமை, ரபியுல் அவ்வல் 12 அதிகாலையில் ஆமினா பீவி ஒரு அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்கள். அந்த குழந்தை தான் கண்மணி நாயகம் முஹம்மது முஸ்தஃபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்……………

வரலாற்று பார்வையில் பதிந்த புனிதப்பிறவி.

Mahabba Campaign Part-2/365

பண்டைய காலத்திலிருந்தே மக்கா நகர்ப் புறமாக இருந்ததால் அங்கு பிறக்கும் ஆண் குழந்தைகளை பாலூட்டி வளர்க்க காற்று மாசு குறைவாக இருக்கும் கிராமங்களுக்கு அனுப்பி வைப்பது வழக்கம். கிராமங்களில் குழந்தைகளுக்கு சுத்தமான காற்று கிடைப்பதோடு தொற்று வியாதிகளிலிருந்து பாதுகாப்பும் கிடைக்கும். மேலும் கிராமச் சுற்றுச் சூழலும், வாழ்க்கை முறையும் அங்கே வளரும் குழந்தைகள் நன்னடத்தையும், நற்பண்புகளும் கொண்டதாக வளர ஏதுவாக இருந்தது.

குழந்தைகளை நற்பண்புகளுடன் வளர்ப்பதில் கிரமாங்களைச் சேர்ந்த சில குடும்பத்தினர் சிறந்து விளங்கினர். அவர்களில் மக்காவுக்குத் தென் கிழக்கில் வாழ்ந்த ஹவாஸின் கோத்திரத்தைச் சேர்ந்த
“பனூ ஸஅத்” குடும்பத்தினர் முக்கியமானவர்கள்.

வளர்ப்புத் தாயார்களின் வரவை நாடிக் காத்திருந்த ஆமினா அம்மையார் தன்னுடைய அன்புச் செல்வத்தை பனூஸஅத் குடும்பத்தினர் பாலூட்ட வேண்டுமென விரும்பினார்கள்.

குழந்தைகளைப் பெற்றுச் செல்ல வளர்ப்புத் தாயார்களின் குழுக்கள் மக்காவுக்கு வரத் தொடங்கின. அக்குழுவில் அபூதுஐப் என்பாரின் மகள் ஹலீமா, அவரது கணவர் ஹாரிஸ் மற்றும் பச்சிளம் குழந்தை அப்துல்லாஹ் (ளம்ரா) வும் இருந்தனர்.

ஹலீமாவின் அனுபவங்கள் வரலாறு ஆயிற்று! அழிக்க இயலாத செய்திகளாக அவை வரலாற்று தாள்களில் கம்பீரமாகப் பதிவு செய்யப்பட்டன.

தனது அனுபவத்தை ஹலீமா கீழ்க்கண்டவாறு கூறுகின்றார் “எங்களுடைய வாழ்வாதாரங்கள் முற்றிலும் அழிந்து விட்ட ஒரு வறட்சி காலம். இயன்றவரை வேகமாக மக்காவுக்குச் சென்று செல்வச் செழிப்பு மிகுந்த ஒரு குடும்பத்திலிருந்து பாலூட்ட ஒரு குழந்தையைப் பெற வேண்டும். கிடைக்கும் ஊதியத்தைக் கொண்டு வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என்று எண்ணினோம்.

சாம்பல் நிறத்திலுள்ள ஒரு பெண் கழுதையும், மடி சுருங்கி பால் வற்றிய ஒரு ஒட்டகமும் மட்டும்தான் எங்களுடன் இருந்தது. என் மார்பகங்களில் பால் இல்லாததால் பசி காரணமாக எனது குழந்தை அழுதுக் கொண்டே இருந்தது.

எங்களைப் போன்ற ஒரு குழுவுடன் சேர்ந்து மக்காவுக்குப் புறப்பட்டோம். மெல்ல மெல்ல நடக்கும் எங்கள் வாகனத்தைக் கண்டு குழுவினர் முணுமுணுத்தனர். மழை பொழிந்தால் நன்றாக இருக்குமே என்று ஏங்கினேன். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.

மக்கா சென்று சேர்ந்ததும் குழந்தைகளைத் தேடி வீடு வீடாகச் சென்றோம். ஆமினா அம்மையார் வீட்டிற்கும் சென்றோம். ஆனால் தந்தையில்லாத காரணத்தால் குழந்தையை ஏற்றெடுக்க யாரும் முன்வரவில்லை. குழந்தைகளின் தந்தைகளிடமிருந்து கிடைக்கும் வெகுமதிகள்தான் எல்லோரின் குறிக்கோள்.

வளர்ப்புத் தாய் என்பது சாதாரண ஒரு கூலி வேலை போன்றதல்ல. எதிர் கால உறவு, அதனால் கிடைக்கும் பலன்கள் ஆகிய தொலை நோக்குப் பார்வையுடன் செய்யப்படும் ஒரு பணி. மேலும் சம்பிரதாயத்தின் பாகமாகவும், நகரம் மற்றும் கிராமக் குடும்பங்களுக்கு மத்தியிலான உறவாகவும் அது இருந்தது. ஒரு அனாதைக் குழந்தையைத் தத்தெடுப்பதற்குத் தயக்கம் காட்ட இதுவே காரணம்.

வந்தவர்கள் எல்லோரும் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு ஊர் திரும்ப தயாராயினர். நான் அந்த அனாதைக் குழந்தையை ஒரு தடவைப் பார்ப்போமே என்று நினைத்து ஆமினா அம்மையார் வீட்டுக்குச் சென்றேன். இந்தக் குழந்தையை நாம் பெற்றுச் செல்வோம். அதன் மூலம் இறைவன் நமக்குக் கருணை காட்டுவான் என்று சொன்னபோது என் கணவர் சம்மதித்தார்.

குழந்தையை எடுத்து நெஞ்சோடு அணைத்தேன். அவ்வளவுதான்! என் மார்பகங்களில் பால் சுரக்கத் தொடங்கியது. பசியால் துடித்த என் மகன் வயிறு நிறைய பால் குடித்தான். என் தத்துப் பிள்ளையும் வயிறு நிரம்பப் பால் குடித்தது.

மிகுந்த ஆச்சரியம்! பால் வற்றிப் போன என் ஒட்டகத்தின் மடி நிறையத் தொடங்கியது. கழுதை உற்சாகத்தில் துள்ளிக் குதித்தது. இவற்றைக் கண்ட என் கணவர் “நீ தேர்ந்தெடுத்த குழந்தை ஓர் அருட்கொடை“ என்று மகிழ்ந்து கூறினார்.

நாங்கள் எங்கள் கிராமத்துக்குத் திரும்பிச் செல்ல ஆயத்தமானோம். நானும், புதிய குழந்தையும் கழுதை மீது ஏறினோம். என்னுடன் வந்த தோழியரின் வாகனங்களைப் பின் தள்ளி எங்கள் கழுதை புதுத் தெம்பு கிடைத்தது போன்று அதிவேகமாகப் பயணிக்கத் தொடங்கியது. இதைக் கண்ட என்னுடன் வந்த தோழிகள் “அதிசயம்! ஹலீமா அதிர்ஷ்டசாலிதான்” என்று வியந்தனர்.

ஆம்! முஹம்மத் முஸ்தஃபா ஸல்லல்லாஹு அலைஹ வஸல்லம் அவர்கள் மக்கா நகரத்திலிருந்து கிராமத்திற்கு பயணிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

Mahabba Campaign Part-3/365

ஹலீமா தனது அனுபவங்களைத் தொடர்கிறார்

“நாங்கள் பனூ ஸஅத் கிராமத்துக்கு வந்து சேர்ந்தோம். எங்கள் குடிலுக்குள் நுழைந்தோம். விவரித்துச் சொல்ல முடியாத ஒரு ஆனந்தம் அங்கே சூழ்ந்தது. குழந்தை முஹம்மத் அவர்களின் வருகை எல்லோருக்கும் மகிழ்வைத் தந்தது. கிராமத்தின் சுற்றுச் சூழல் மாற ஆரம்பித்தது. தரிசாகக் கிடந்த பூமி பசுமையைப் போர்த்தத் தொடங்கியது. புற்புண்டுகள் முளைத்து கால்நடைகளுக்குப் புதிய மேய்ச்சல் இடங்கள் கிடைத்தன. பக்கத்திலுள்ள கால்நடைகள் பால் கறக்காத போதும் எங்கள் கால்நடைகளின் மடிகள் எப்போதும் நிறைந்து காணப்பட்டன. இதனால் “ஹலீமாவின் ஆடுகள் மேயுமிடத்தில் நாமும் மேய்க்கலாம்“ என்று சிலர் கூறுவர்.

இரண்டு வயது வரை மகன் முஹம்மதுக்குப் பாலூட்டினேன். அசாதாரணமாக இருந்தது அவரது வளர்ச்சி. தாயார் ஆமினா அவர்களிடம் மகனைத் திரும்ப ஒப்படைக்கும் காலம் நெருங்கிக் கொண்டிருந்தது. ஆனால் அவர்களைப் பிரிய மனம் ஒப்பவில்லை. அமுதூட்டி கொஞ்சிய மகனை விட்டுத்தர மனம் சம்மதிக்கவில்லை. அன்பு மகனுடைய வரவால் கிடைத்த ஆனந்தமும் நடந்த அற்புதங்களும் விவரிக்க இயலாதவை.
அந்நேரத்தில் மக்காவில் ஒரு வகைத் தொற்று நோய் பரவத் தொடங்கியதால் அதைக் காரணம் காட்டி மேலும் கொஞ்சக் காலம் மகன் எங்களிடம் இருக்கட்டும் என தாயார் ஆமினாவிடம் கேட்டேன். அரைகுறை மனதுடன் அவர்கள் ஒப்புக் கொண்டார்கள். மட்டற்ற மகிழ்ச்சியோடு வீடு திரும்பினேன். எனது மகள் ஷைமா ஆனந்தக் கூத்தாடினாள். அவள்தான் மகன் முஹம்மதைத் தாலாட்டுவாள், சீராட்டுவாள், தோளில் சுமந்து நடப்பாள்.

மாதங்கள் உருண்டடோடின. மகன்கள் முஹம்மதும், ளம்ராவும் எங்கள் வீட்டின் பின்புறம் புல்மேட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். திடீரென ளம்ரா பதட்டத்துடன் ஓடி வந்தான். அச்சத்துடன் திக்கித் திணறி, “நம்முடைய குறைஷி சகோதரனை வெள்ளாடை அணிந்த இருவர் தூக்கிச் சென்று சற்றுத் தூரத்தில் படுக்க வைத்து நெஞ்சைக் கிழிக்கின்றனர்” என்றான். நானும், என் கணவரும் பயந்து போய் அங்கே ஓடிச் சென்றோம். தூரத்தில் குழந்தை முஹம்மத் நிற்கின்றார். முகம் விளரி இருந்தது.

அவரை வாரியெடுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டு “அன்பு மகனே! என்ன நடந்தது? என வாஞ்சையோடு கேட்டேன்.

“வெண்ணிற ஆடை அணிந்த இருவர் வந்து என்னைப் படுக்க வைத்து நெஞ்சைப் பிளந்து உள்ளே இருந்து ஏதோ ஒன்றை வெளியே எடுத்தனர். அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை!” என்றார் குழந்தை முஹம்மத்!

நாங்கள் சுற்று முற்றும் பார்த்தோம். யாரையும் காணவில்லை. நெஞ்சில் காயமோ, இரத்தக் கறையோ இல்லை. உடல் முழுக்கப் பரிசோதித்தபோது ஒரு அதிசயத்தைக் கண்டோம். தோல்பட்டையில் ஒரு முத்திரை ………..

Mahabba Campaign Part-4/365

அண்ணலாரின் தோல்பட்டையில் இருந்தது நபித்துவத்தின் அடையாளமாகும். அதை அரபியில் “கத்தமுன்னுபுவ்வா” என்று அழைக்கப்படும். பிறப்பிலிருந்தே நபிகளாரின் முதுகில் இந்த முத்திரை இருப்பினும் இப்போது அதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. புறாவின் முட்டையின் வடிவம், சதை துண்டின் தடி, லேசாக முடிகளும் சுற்றப்பட்டிருக்கும். இவ்வாறு ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

அடுத்து என்ன செய்வது என்று ஹலீமாவும் கணவரும் ஆலோசனையிலானார்கள். விரைவாக மக்காவிற்கு சென்று தாயார் ஆமினா(ரலி) பீவியிடத்தில் குழந்தையை ஒப்படைத்து நடந்த அதிசயங்களை சொல்ல வேண்டும். இதற்கிடையில் இன்னொரு அச்சமும் ஏற்ப்பட்டது, நுபுவ்வத்தின் முத்திரையுள்ள குழந்தையை வேதக்காரர்கள் அடையாளம் கண்டுகொண்டனர். இந்த குழந்தை தான் முன் வேதங்களில் வாக்குறுதி அளிக்கப்பட்ட நபி என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். யூதர்கள் பகைமையுடன் பார்க்க ஆரம்பித்தார்கள்.

ஹலீமா(ரலி) தன் மகனுடன் மிகுந்த அச்சத்துடன் மக்கா சென்று ஆமினா பீவியை அணுகினார்கள். நடந்த விஷயங்களையெல்லாம் எடுத்துச் சொன்னார்கள். இருப்பினும் பீவி அமினா எந்த கவலையும் அடையவில்லை. அதற்கு பதிலாக ஹலீமாவை அவர் ஆறுதல் கூறினார்கள். “பெரிய பதவிகள் என் மகனுக்குக் காத்திருக்கின்றன”. கர்ப்பகால அனுபவங்களும் ஹலீமாவிடம் அவர் எடுத்துச் சொன்னார்கள்.
இதைக் கேட்டதும் ஹலீமா(ரலி) அப்படியென்றால் தனது மகனுடன் திரும்பிச் செல்கிறேன் என்று கூறினார். ஆனால் ஆமினா(ரலி) அனுமதிக்கவில்லை. சந்தோஷத்துடன் அவர்கள் ஹலீமா பீவியை வழியனுப்பினார்கள்.

அன்புத் தாயும் மகனும் சேர்ந்து வாழ்ந்த நாட்கள். குடும்பத்தில் அனைவருக்கும் பிரியமான மகன். குடும்பத்தில் அதே பருவமுள்ள மற்ற பிள்ளைகளும் இருக்கிறார்கள். குறிப்பாக ஹம்சா மற்றும் ஸ்வஃபியா. அவர்கள் இரண்டு பேரும் நபிகளாரின் சிறிய தந்தையும் மற்றும் அத்தையுமாக இருந்தாலும் மூவருக்கும் ஒரே வயதுதான். அவர்களுக்கிடையே வலுவான நட்பு இருந்தது. மூன்று இனிமையான வருடங்கள் இப்படியே கழிந்தன.

அப்துல் முத்தலிபுக்கு கஅபாவின் அருகில் ஒரு சிறப்பு இருக்கை இருந்தது. அதில் குழந்தைகள் யாரும் அமர மாட்டார்கள். ஆனால் அன்புபேரன் முகமதி(ﷺ)ற்க் அந்த இடத்தில் தனிப்பட்ட அதிகாரம் இருந்தது. இது குறித்து நாட்டு முக்கியஸ்தர்கள் பலர் அப்துல் முத்தலிபிடத்தில் கேட்டுள்ளனர். அதற்கு அவர் சொன்னார்: “இந்த மகனில் பல அற்புதங்களை நான் காண்கிறேன்” .

அவரது பேரனில் பல கவர்ச்சிகரமான வெளிப்பாடுகள் தெரிந்தன. தனது மகனுக்கு ஆறு வயதடைந்த போது தாயார் ஆமினாவிற்க்கு ஒரு ஆசை, மகனுடன் யத்ரிபிலுள்ள (மதீனா) உறவினர்களை சந்திக்கச் செல்ல வேண்டும். மக்காவிலிருந்து மதீனாவிற்க்கு செல்லும் ஒரு வணிகக் குழுவுடன் பீவி ஆமினா அவர்கள் மகனுடன் புறப்பட்டார்கள். உதவியாளர் உம்மு அய்மனும் (பராக்கா) உடனிருந்தார்கள். யஸ்ரிப் வந்து உறவினர்களுடன் நாட்களைக் கழித்தார்கள். அன்புக் கணவர் அப்துல்லாவின் கப்றை தனது மகனுடன் பார்வையிட்டார்.

கஸ்ரஜ் குடும்பத்திற்கு சொந்தமான குளத்தில் நீச்சலடித்தல், நன்பர்களுடன் பட்டம் பறக்க விடுவது போன்ற அன்றைய அனுபவங்களை நபிகள் நாயகம் (ﷺ) அவர்கள் பின்னர் நினைவு கூர்ந்தார்கள். பிறகு மக்காவிறதிரும்பினார்கள். சிறிது தூரம் சென்றதும் தாயார் ஆமினாவிற்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

Mahabba Campaign Part-5/365

இதற்குமேல் பயணத்தைத் தொடர்வது கடினமாகும். ஏதேனும் ஓரிடத்தில் ஓய்வு எடுத்து பின்னர் பயணத்தை தொடர்வதே சிறந்தது. ஆகையால் “அபாவா” என்ற இடத்தில் ஓய்வெடுத்தார்கள். ‘அபாவா’ மதீனாவிலிருந்து மக்கா செல்லும் வழியில் 273 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. அன்னையாரின் உடல்நிலை மேலும் சீர்குலைந்தது. இறுதியில் அன்னை ஆமினா (ரலி) அவங இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்கள்.கர்ப்ப காலத்திலேயே தந்தையை பிரிந்து, தற்போது இப்போது தாயையும் இழந்தார்கள். அண்ணலெம் பெருமான் நாயகம் (ﷺ) அவர்கள் தமது ஆறாம் வயதில் முழு அனாதை ஆனார்கள்.
தாயாருக்கும் மகனிற்கும் இடையிலான இறுதிச் சமய உரையாடல் மிக சிந்தனைக்குறியதாகவும் உணர்ச்சிகரமாகவும் இருந்தது. ‘என் அன்பு மகனே! நான் உன்னை விட்டுப் பிரியப் போகிறேன். நான் உன்னிடம் நிறைவான நற்குணங்களை காண்கின்றேன். நிச்சயமாக நான் கண்ட கனவுகள் அனைத்தும் நனவாகும். அவ்வாறெனில் நீங்கள் அனைத்து மனிதகுலத்திற்கும் நபியாக இருப்பீர்கள்”. இவ்வாறு கூறி ஆமினா (ரலி) அவர்கள் தனது அன்பு மகனை அருகில் அழைத்து முத்தம் கொடுத்தார்கள். தனது மகனை நன்றாக கவனித்துக் கொள்ளுமாறு உடனிருந்த பரக்கா என்பவரை நினைவூட்டினார்கள்.

வரலாற்றில் மிகவும் அதிர்ஷ்டசாலியான உதவியாளர்களில் ஒருவரான பரக்கா ‘உம்மு அய்மன்’ என்ற பெயராலும் அழைக்கப்படுவார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களைக் கவனித்துக் கொள்ள நியமிக்கப்பட்டவர். அண்ணலாரின் குழந்தைப் பருவம், இளமைப் பருவம், என அனைத்து பருவங்களிலும் அண்ணலாருக்கு பணிவிடை செய்து சாட்சியம் வகித்தவர்கள். ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தை தழுவினார்கள். அவர் நாயகத்தின் குழந்தைகளிற்கும் பின்னர் அவர்களது பேரக் குழந்தைகளிற்கும் பணிவிடை செய்து பாதுகாப்பாக கவனித்து வளர்த்து வந்தார்கள். ஹிஜ்ரத் பயணத்தின் போது உம்மு அய்மன் (ரலி) அவர்கள் பெற்ற அருட்கொடைகளை ஹதீஸில் பின்வருமாறு காணலாம். மதீனா செல்லும் வழியில், கூட்டத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு, வழி தெரியாமல், தண்ணீர் இல்லாமல் பாலைவனத்தில் அலைந்தார்கள். அப்போது, ​​வானத்திலிருந்து ஒரு வாளி இறங்கியது, அதிலிருந்து தாகம் தீரும் வரை தண்ணீர் குடித்தார்கள். பிறகு வாழ்க்கையில் ஒருபோதும் அவருக்கு தாகம் ஏற்படவில்லை.
உம்முஅய்மன் (ரலி) அவர்கள் சுவனத்தில் நுழைவார்கள் என்ற சுபச்செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாகப் பெற்றார்கள். அவர் நபி (ஸல்) அவர்களுக்கு பணிவிடை செய்யக் கூடிய ஜைத் இப்னு ஹாரித் (ரலி) அவர்களின் மனைவியும் உசாமா பின் ஜைதின்(ரலி) அவர்களின் தாயும் ஆனார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் மிகவும் நேசிக்கப்பட்ட மனிதர். இது இறையச்சமுடைய உம்மு அய்மன்(ரலி) அவர்களின் வரலாற்று சம்பவமாகும்

அன்னை ஆமினா (ரலி) அவர்கள் அபாவாவில் அடக்கம் செய்யப்பட்டார்கள். வேதனையால் நிறைந்த இதயமும், அன்பினால் வடிந்த கண்ணீரும் அந்த பிரிவிற்கு சாட்சியாக இருந்தது.ஆறு வயதில் ஏற்பட்ட இழப்பின் வேதனை நாயகம் ﷺ அவர்களின் உள்ளத்தில் ஆழமாக பதிந்தது. அறுபது வயதில் அன்னை ஆமினா (ரலி) அவர்களைத் தம் சீடர்களுடன் சந்தித்தபோதும் அதை நினைவுகூர்ந்தார்கள். பரக்காவும் அவரது மகனும் மக்காவிற்குப் பயணத்தைத் தொடர்ந்தனர்.பாட்டனார் அப்துல் முத்தலிப் என்பவருக்கு ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டது. அன்பு பேரனைப் பெறுவதற்காகக் காத்திருந்தார். முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அனாதையாக எந்த விதமான பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொள்ள முடிவு செய்தார். அனைத்து தருனங்களிலும் அவர்களுடன் நடனமாடினார். ஒவ்வொரு நொடியும் அவர் தன் பேரனின் அரிய நற்குணங்களையும்,அற்புத தன்மைகளையும் உணர்ந்தார்.
அதை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொண்டார். பொது விவாதங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கருத்தைக் கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் மட்டும்தான் உணவருந்துவார்.தமது சொந்தப் பிள்ளைகள் இதர பேரப்பிள்ளைகள் என அனைவரும் வந்தாலும் கூட பேரன் கண்மணி நாயகம் (ﷺ) அவர்கள் வருவதற்காகக் காத்திருப்பார்.அப்துல் முத்தலிப் என்பவருக்கு முஹம்மது (ஸல்) அவர்கள் இல்லாமல் அமைதி கிடைப்பதில்லை. “உம்மு அய்மன் ஒருபோதும் என் மகனைத் தவற விட்டுவிடாதே” சித்ரா மரத்தடியில் இதர குழந்தைகளுடன் எம் மகன் முஹம்மது நிற்பதைக் நான் கண்டேன். ஒவ்வொரு தருணங்களிலும் பேரனை மிகுந்த அன்புடனும் பாசத்துடனும் பாட்டனார் பாதுகாத்தார்.
இவ்வாறு நாட்கள்
உருண்டோடின…

Mahabba Campaign Part-6/365

அப்துல் முத்தலிப் மக்கா மாநகர செல்வ பிரமுகர்களின் தலைவராக திகழ்ந்தார்.அவர்களை சந்திக்க அண்டை நாடுகளிலிருந்து வரை சமுதாய முன்னோடிகள் தேடி வந்தனர். அவர்களில் பாதிரியார்களும் வேதக்காரர்களும் அடங்குவர்.சந்திக்க வருபவர்கள் அனைவரும் தனது பேரனை குறிப்பாக பார்ப்பதையும் கவனிப்பதையும் அப்துல் முத்தலிப் கவனித்தார்.மேலும் அவர்கள் இறுதி நபியை பற்றி அப்துல் முத்தலிப் அவர்களிடம் கூறுவார்கள்.அவரும் நாயகம் ﷺ அவர்களிடம் கண்ட அதிசய அடையாளங்களை விவரிப்பார்கள். அப்போது அப்துல் முத்தலிப் மிகுந்த பெருமிதத்துடன் தனது பேரனைத் தன் அருகில் அரவணைத்து பிடித்துக் கொள்வார்.

ஒருமுறை நஜ்ரான் நாட்டிலிருந்து வேதக்காரர்களான ஒரு குழு வந்தது. அந்த குழுவில் இருந்த பாதிரியார்கள் மக்காவின் தலைவர் அப்துல் முத்தலிபிடம் நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தனர்.அவர்களின் உரையாடலின் போது உலகை உய்விக்க வரும் உத்தம தூதரைப் பற்றிய சர்ச்சை எழுந்தது.இறுதி தூதர் இஸ்மாயில் நபி (அலை) அவர்களின் பரம்பரையில் தான் பிறப்பார். முன் கழிந்த வேதங்களில் குறிப்பிட்டதன் அடிப்படையில் அவர்கள் உதிப்பதற்கான நேரம் நெருங்கி விட்டது. அந்நேரம் திடீரென கண்மணி நாயகம் ﷺ அவர்கள் அங்கு வருகை புரிந்தார்கள்.அங்கிருந்த பாதிரியார்களின் கவனம் ரஸூல் ﷺ அவர்களின் பக்கமாக திரும்பியது.அவர்கள் அண்ணலின் புனித தோள் புஜங்கள் இனிய பாதங்கள் மற்றும் அழகிய கண் இமைகளை கூர்ந்து கவனித்த பின்னர் உடன் “இவர்கள் தான் அந்த புனித மனிதர் என்று உறக்க சப்தமிட்டு கூறினார்கள்.பிறகு அப்துல் முத்தலிப் அவர்களிடம் “இந்த குழந்தைக்கு நீங்கள் யார்? என்று வினவினார்கள்.அதற்கு அவர் இது எமது மகன் என பதிலளித்தார். நீங்கள்
இந்தக் குழந்தையின் தந்தையா? இல்லை.ஒருபோதும் அதற்கு சாத்தியமில்லை.இதைக்கேட்ட பின்னர்
அப்துல் முத்தலிப் இவர்கள் எம் பேரன் என்றார்.இதைக் கேட்ட பாதிரியார்கள்
அது உண்மையாக இருக்கும் என ஒப்புக்கொண்டனர். இந்த மகனை மிக கவனமாக பராமரிக்க வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைத்தனர். அப்துல் முத்தலிப் தன் குழந்தைகள் அனைவரையும் வரவழைத்து பாதிரியார்கள் கூறியதை விளக்கினார்.பிறகு நீங்கள் அனைவரும் இந்த அன்பு மகனுக்கு பாதுகாப்பாளர்களாகவும் உதவியாளர்களாகவும் இருக்க வேண்டும். எப்போதும் இவர்களின் மீது கவனமாக இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

மற்றொரு தினம் அப்துல் முத்தலிபுடைய இதர குழந்தைகளுடன் நாயகம் ﷺ அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பனூ முத்லஜ் என்ற கோத்திரத்தைச் சார்ந்த சில ஞானிகள் நாயகத்தை பரிசோதிக்க வந்தனர்.நீண்ட நேரத்திற்குப் பிறகு நாயகம் ﷺ அவர்களை அருகில் அழைத்து, அவர்களது புனித பாதங்களையும் அழகிய விரல்களையும் பரிசோதித்தனர். பிறகு அப்துல் முத்தலிபை அழைத்து குழந்தையை கவனமாக பார்த்துக் கொள்ளுமாறு அறிவுரை கூறினார்கள்.நாயகத்தின் புனித காலடித் தடம் அப்படியே நபி இப்ராஹீம்(அலை) அவர்களின் காலடித்தடத்துடன் ஒப்பாக இருக்கிறது என்றார்கள்.

அப்துல் முத்தலிப் முஹம்மது நபி (ﷺ) அவர்களைப் பற்றிய ஏராளமான சுபச் செய்திகளை பல நபர்களிடமிருந்தும் கேட்டறிந்தார். ‌ஒருநாள் ஏமன் நாட்டு மன்னர் ஸைஃப் பின் ஸீயஸன் என்பவர் குரைஷி பிரமுகர்களுக்கு ஒரு விருந்து உபசரிப்பு ஏற்பாடு செய்திருந்தார்.அரச வரவேற்புக்குப் பிறகு அந்த மன்னர் அப்துல் முத்தலிபை ஒரு தனி அறைக்கு அழைத்து, அப்துல் முத்தலிப் எதிர்பார்க்கப்பட்ட ஒரு நபியின் பாட்டனார் என்பதால் மன்னர் அவருக்கு மிகுந்த மரியாதை காட்டினார்.

பாட்டனார் அப்துல் முத்தலிப் தனது பேரனின் கண்ணியத்தை புரிந்து கொண்டார். அவருக்கு மிகுந்த மரியாதையும் பாசமும் கொடுத்தார். அப்போது மக்காவில் வறட்சி ஏற்பட்டது. வறட்சியும் பட்டினியும் மக்கா மாநக மக்களை வாட்டி எடுத்தது.அவர்கள் மழை கிடைப்பதற்காக பல பிரார்த்தனைகளும் நடத்தினர்.ஆனால் ஒரு பலனுமில்லை. பின்னர் ருகைகா என்ற பெண்மணி ஒரு கனவு கண்டார். அதாவது, இறுதி நபி மக்காவில் உதித்துள்ளார்கள். அல்லாஹுவின் புகழ்களையும் நபிகள் நாயகத்தின் மாண்புகளையும் சொல்லப்பட்டது.அதுமட்டுமின்றி அவரது பாதுகாவலரின் உருவம் மற்றும் பண்புகள் அனைத்தும் கனவில் தெரிவிக்கப்பட்டன. நீங்களும் நபிகள் நாயகத்துடன் சேர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள் என்றும்
தொழுகையின் முறைகளும் கனவில் தெரிவிக்கப்பட்டது.

காலையில் எழுந்ததும் ருகைகா என்பவர் பீதியடைந்து, இரவில் பார்த்த கனவை பிற மக்களிடம் எடுத்துச் சொன்னார்…

Mahabba Campaign Part-7/365

மக்காவாசிகள் ருகைகா என்பவரின் கனவை அறிந்தனர். கனவில் எங்கிருந்தோ ஒரு குரல் கேட்டது. ஓ குரைஷ்! இறைவன் வாக்குறுதி அளித்த நபி உங்களுடன் உள்ளார்.அவர்கள் உதிப்பதற்கான நேரம் நெருங்கி விட்டது.உங்களில் உன்னதமான ஓர் நபர் இருக்கிறார். வெள்ளை நிற உடலுடன் அழகு மிக்க நீண்ட இமைகளும் மென்மையான உடலும் கொண்டவர். நீண்ட மூக்கு மற்றும் அடர்த்தியான முகத்தை உடையவர். அவருடைய பிள்ளைகளும் பேரக்குழந்தைகளும் வரிசையில் நிற்க வேண்டும். மக்காவின் ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒரு பிரதிநிதியும் அவருடன் நிற்கட்டும். அவர்கள் அனைவரும் புனித கஅபாவின் மூலையில் ஒன்றுசேர்ந்து புனித கஅபாவை மரியாதையுடன் முத்தமிட்ட பிறகு, அனைவரும் புனித கஅபாவை ஏழு முறை சுற்றி வர வேண்டும். பிறகு “அபு குபைஸ்” மலையில் அனைவரும் சேர்ந்து தொழ வேண்டும். அனைவரும் தலைவரைச் சுற்றி திரள வேண்டும். தலைவன் எல்லாம் வல்ல இறைவனிடம் மன்றாட வேண்டும். மிகவும் பயபக்தியுள்ள நபரை அவர்களுக்கு முன்னால் வைத்திருக்க வேண்டும்.அவர் இறைவனிடம் பிரார்த்திக்க மற்றவர்கள் ஆமீன் கூறவேண்டும்.

கவிதாயினி (கவிதை இயற்றுபவர்) ஆன ருகைகா என்பவர் ஏற்கனவே குளித்து சுத்தமாகி கஅபாவை அடைந்திருந்தார். கஅபாவைச் சுற்றி வலம் வரும் நிகழ்வு முடிந்தன. அப்துல் முத்தலிப் மற்றும் அவரது மகன்கள் மற்றும் பிற பிரமுகர்களும் மக்காவில் இருந்து வந்தனர். கனவில் அறிவிக்கப்பட்ட தலைவர் அப்துல் முத்தலிப் என்பது புலர்ந்தது.பின்னர் அவர்கள் அனைவரும் மலை உச்சியை அடைந்ததும், அப்துல் முத்தலிப் என்பவர் ஏழு வயதுடைய தமது அன்பு மகன் நாயகம் ﷺ அவர்களை அழைத்துச் சென்று மடியில் கிடத்தினார். பிறகு அப்துல் முத்தலிப் எல்லாம் வல்ல இறைவனிடம் மன்றாடத் தொடங்கினார். இறைவா! நாங்கள் உமது அடிமைகள் மற்றும் அவர்களின் மக்கள் அனைவரும் சங்கமித்திருக்கின்றோம்.வெகுநாட்களாக நாங்கள் மழையின்றி வறட்சியால் வாடுகின்றோம்.எங்களுக்கு நீ மழை அளிப்பாயாக…!உடனே நல்ல மழை பொழிந்தது.மக்கா மாநகரம் செழிப்படைந்தது.

ருகைகா எனும் பெண்மணி தொடர்ந்து கூறுகிறார். அப்துல் முத்தலிபின் தொழுகை முடிந்தது. மழை கொட்டித் தீர்த்தது.அங்குள்ள பள்ளத்தாக்குகள் அனைத்தும் நிறைந்து அனைவரும் மகிழ்ச்சியில் இருந்தனர்.அனைவரும் அப்துல் முத்தலிபை பாராட்டினர்.இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் ருகைகா கவிதை வாசித்தார்.அதன் பொருள் பின்வருமாறு… “ஷைபதுல் ஹம்த் (அப்துல் முத்தலிபின் அழைப்பெயர்) மூலம் அல்லாஹ் நமக்கு மழையை அளித்தான். நீண்ட கால துயரங்களுக்கு பின் இது ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட வருடம்.செடிகள் துளிர்க்கத் தொடங்கின. அனைத்து உயிரினங்களும் ஏராளமான மழையைப் பெற்றன. வறண்ட பள்ளத்தாக்குகள் பச்சை நிற உடையணிந்தன.
“முளர்” கோத்திரத்தில் வரவிருக்கும் ஒரு இறைத்தூதரின் காரணமாகவே நமக்கு இந்த மழை இறங்கியது.
அவர் மனித குலத்தில் அதிச்சிறந்தவராகும்.
ஒவ்வொரு சம்பவமும் நாயகத்தின் அசாதாரண ஆற்றலையும் அற்புதத் தன்மைகளையும் எடுத்துரைத்தது. இந்நேரத்தில் நபி ﷺ அவர்களுக்கு ஓர் கண் நோய் ஏற்பட்டது. அப்துல் முத்தலிப் பல மருந்துகளையும் கொடுத்தார். ஆனால் எந்த பலனுமில்லை.இறுதியாக அப்துல் முத்தலிப் “உக்காள்”எனும் சந்தையில் உள்ள ஒரு பிரசித்தி பெற்ற மருத்துவரிடம் காண்பித்தார்.அவர் ஒரு வேத அறிஞராகவும் திகழ்பவர்.அப்துல் முத்தலிபும் ஆருயிர் பேரனும் மருத்துவரின் வீட்டிற்குச் சென்றனர். பரிசோதனைக்குப் பிறகு மருத்துவர் இது சாதாரணக் குழந்த அல்ல. இது நாம் அனைவரும் எதிர்பார்த்திருந்த தூதர் ஆகும். வேதக்காரர்கள் இந்தக் குழந்தையைப் பின்பற்றுவார்கள். எந்நேரமும் இந்த குழந்தை மீது கவனமாக இருங்கள் என்றார்.பின்னர் மருத்துவர் அவர்களுக்கு மருந்து கொடுத்து அனுப்பி வைத்தார்.

நபி ﷺ அவர்களுக்கு இப்போது எட்டு வயதாகும்.வயதான அப்துல் முத்தலிப் முதுமையின் காரணமாக சோர்வடையத் தொடங்கினார்.

Mahabba Campaign Part-8/365

மக்காவாசிகள் ருகைகா என்பவரின் கனவை அறிந்தனர். கனவில் எங்கிருந்தோ ஒரு குரல் கேட்டது. ஓ குரைஷ்! இறைவன் வாக்குறுதி அளித்த நபி உங்களுடன் உள்ளார்.அவர்கள் உதிப்பதற்கான நேரம் நெருங்கி விட்டது.உங்களில் உன்னதமான ஓர் நபர் இருக்கிறார். வெள்ளை நிற உடலுடன் அழகு மிக்க நீண்ட இமைகளும் மென்மையான உடலும் கொண்டவர். நீண்ட மூக்கு மற்றும் அடர்த்தியான முகத்தை உடையவர். அவருடைய பிள்ளைகளும் பேரக்குழந்தைகளும் வரிசையில் நிற்க வேண்டும். மக்காவின் ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒரு பிரதிநிதியும் அவருடன் நிற்கட்டும். அவர்கள் அனைவரும் புனித கஅபாவின் மூலையில் ஒன்றுசேர்ந்து புனித கஅபாவை மரியாதையுடன் முத்தமிட்ட பிறகு, அனைவரும் புனித கஅபாவை ஏழு முறை சுற்றி வர வேண்டும். பிறகு “அபு குபைஸ்” மலையில் அனைவரும் சேர்ந்து தொழ வேண்டும். அனைவரும் தலைவரைச் சுற்றி திரள வேண்டும். தலைவன் எல்லாம் வல்ல இறைவனிடம் மன்றாட வேண்டும். மிகவும் பயபக்தியுள்ள நபரை அவர்களுக்கு முன்னால் வைத்திருக்க வேண்டும்.அவர் இறைவனிடம் பிரார்த்திக்க மற்றவர்கள் ஆமீன் கூறவேண்டும்.

கவிதாயினி (கவிதை இயற்றுபவர்) ஆன ருகைகா என்பவர் ஏற்கனவே குளித்து சுத்தமாகி கஅபாவை அடைந்திருந்தார். கஅபாவைச் சுற்றி வலம் வரும் நிகழ்வு முடிந்தன. அப்துல் முத்தலிப் மற்றும் அவரது மகன்கள் மற்றும் பிற பிரமுகர்களும் மக்காவில் இருந்து வந்தனர். கனவில் அறிவிக்கப்பட்ட தலைவர் அப்துல் முத்தலிப் என்பது புலர்ந்தது.பின்னர் அவர்கள் அனைவரும் மலை உச்சியை அடைந்ததும், அப்துல் முத்தலிப் என்பவர் ஏழு வயதுடைய தமது அன்பு மகன் நாயகம் ﷺ அவர்களை அழைத்துச் சென்று மடியில் கிடத்தினார். பிறகு அப்துல் முத்தலிப் எல்லாம் வல்ல இறைவனிடம் மன்றாடத் தொடங்கினார். இறைவா! நாங்கள் உமது அடிமைகள் மற்றும் அவர்களின் மக்கள் அனைவரும் சங்கமித்திருக்கின்றோம்.வெகுநாட்களாக நாங்கள் மழையின்றி வறட்சியால் வாடுகின்றோம்.எங்களுக்கு நீ மழை அளிப்பாயாக…!உடனே நல்ல மழை பொழிந்தது.மக்கா மாநகரம் செழிப்படைந்தது.

ருகைகா எனும் பெண்மணி தொடர்ந்து கூறுகிறார். அப்துல் முத்தலிபின் தொழுகை முடிந்தது. மழை கொட்டித் தீர்த்தது.அங்குள்ள பள்ளத்தாக்குகள் அனைத்தும் நிறைந்து அனைவரும் மகிழ்ச்சியில் இருந்தனர்.அனைவரும் அப்துல் முத்தலிபை பாராட்டினர்.இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் ருகைகா கவிதை வாசித்தார்.அதன் பொருள் பின்வருமாறு… “ஷைபதுல் ஹம்த் (அப்துல் முத்தலிபின் அழைப்பெயர்) மூலம் அல்லாஹ் நமக்கு மழையை அளித்தான். நீண்ட கால துயரங்களுக்கு பின் இது ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட வருடம்.செடிகள் துளிர்க்கத் தொடங்கின. அனைத்து உயிரினங்களும் ஏராளமான மழையைப் பெற்றன. வறண்ட பள்ளத்தாக்குகள் பச்சை நிற உடையணிந்தன.
“முளர்” கோத்திரத்தில் வரவிருக்கும் ஒரு இறைத்தூதரின் காரணமாகவே நமக்கு இந்த மழை இறங்கியது.
அவர் மனித குலத்தில் அதிச்சிறந்தவராகும்.
ஒவ்வொரு சம்பவமும் நாயகத்தின் அசாதாரண ஆற்றலையும் அற்புதத் தன்மைகளையும் எடுத்துரைத்தது. இந்நேரத்தில் நபி ﷺ அவர்களுக்கு ஓர் கண் நோய் ஏற்பட்டது. அப்துல் முத்தலிப் பல மருந்துகளையும் கொடுத்தார். ஆனால் எந்த பலனுமில்லை.இறுதியாக அப்துல் முத்தலிப் “உக்காள்”எனும் சந்தையில் உள்ள ஒரு பிரசித்தி பெற்ற மருத்துவரிடம் காண்பித்தார்.அவர் ஒரு வேத அறிஞராகவும் திகழ்பவர்.அப்துல் முத்தலிபும் ஆருயிர் பேரனும் மருத்துவரின் வீட்டிற்குச் சென்றனர். பரிசோதனைக்குப் பிறகு மருத்துவர் இது சாதாரணக் குழந்த அல்ல. இது நாம் அனைவரும் எதிர்பார்த்திருந்த தூதர் ஆகும். வேதக்காரர்கள் இந்தக் குழந்தையைப் பின்பற்றுவார்கள். எந்நேரமும் இந்த குழந்தை மீது கவனமாக இருங்கள் என்றார்.பின்னர் மருத்துவர் அவர்களுக்கு மருந்து கொடுத்து அனுப்பி வைத்தார்.

நபி ﷺ அவர்களுக்கு இப்போது எட்டு வயதாகும்.வயதான அப்துல் முத்தலிப் முதுமையின் காரணமாக சோர்வடையத் தொடங்கினார்.

Mahabba Campaign Part-9/365

அனாதையாக இருப்பது ஒரு துரதிர்ஷ்டமாகவே பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு பெரும்பாலும் கிடைக்கவேண்டிய அரவணைப்புகள் கிடைப்பதில்லை. குறிப்பாக, அவர்களுக்கு சரியான முறையான ஒழுக்க நெறிகள் கிடைக்காமல் போகலாம்.ஆனால் இவை எதுவும் நபி (ﷺ) அவர்களைப் பாதிக்கவில்லை. மேலும், நபி (ﷺ) அவர்கள் அனாதையாக இருப்பதற்க்கு சில காரணங்களை அல்லாஹ் வைத்துள்ளான். இதைப்பற்றி ஆராய்ச்சி செய்த உலமாக்கள் அதை விளக்கமாக அவர்களது நூல்களில் பதிவு செய்துள்ளார்கள். நபிகள் நாயகம் (ﷺ) அவர்களின் வம்சாவளியிலுள்ள இமாம் ஜாஃபர் சாதிக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள் : யாருக்கும் எந்தக் கடமைகளும் இல்லாத நிலையில் வளர வேண்டும் என்பதற்காகவே அண்ணலாரை இறைவன் யதீமாக ஆக்கினான். பெற்றோருக்கான கடமைகள் ஒருபோதும் பூரணமாக நிறைவேற்ற முடியாதல்லவா..!

மற்றொரு விளக்கம் என்னவெனில் நபிகள் நாயகம் (ﷺ) அவர்களின் புகழ், கண்ணியம், மகத்துவம் ஆகிய அனைத்தும் எல்லாம் வல்ல இறைவனிடமிருந்து நேரடியாக கிடைக்கப்பெற்றவை என்பதாகும். நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்: இறைவன் தான் எம்மை ஒழுங்குபடுத்தினான், அதுவே சிறந்த ஒழுக்கம்”.

அல்லாஹ் ஒருவரை மேன்மைப்படுத்தினால் அவர் உயர்ந்தவராக இருப்பார், அனாதையாக இருப்பது அதற்குத் தடையாக இருக்காது. அனாதையாக வளர்ந்த ஒருவர் அனாதைகளின் வலியை விரைவில் உணர்ந்து கொள்வார். கியாமத் நாள் வரை வரக்கூடிய அனைத்து அனாதைகளும் அவரது அன்புக்குரிய நபி (ﷺ) அவர்களும் ஒரு அனாதை என்பதை நினைத்து ஆறுதல் அடைவார்கள். நபிகளாரின் திறமைகள் மற்றும் திறன்கள் அனைத்தும் இறைவனால் கொடுக்கப்பட்டவை. யாரிடமிருந்தும் கடன் வாங்கப்பட்டதல்ல. இப்படி ஏராளமான தத்துவங்கள் நாயகம் ﷺ அவர்கள் அனாதையாக இருப்பதில் அடங்கியுள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக, படைப்பாளன் தனது ஹபீப்பை தனது நேரடி கவனிப்பில் வளர்க்க முடிவு செய்தான். இது ஒரு பாக்கியம் மற்றும் ஆசீர்வாதமாகும். இது ஒரு அவமானம் அல்லது குறைபாடு அல்ல.
இதை இறைவன் திருக்குர்ஆனில் 93 ஆம் அத்தியாயத்தில் இயம்புகின்றான்.

நபி(ﷺ) அவர்கள் அபூதாலிபுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தார்கள். நபிகளாரின் புன்னகை தவழும் முகமும் உற்சாகமும், அனைவராலும் கவரப்பட்டது. அபூதாலிப் நபி(ﷺ) அவர்களின் சில பழக்கவழக்கங்களை இப்படி வரைகிறார். எல்லோரும் காலையில் மனமில்லாமல் சோர்வுடன் எழுவார்கள். ஆனால் எவ்வித சோர்வோ,தளர்ச்சியோ அல்லது
குறைபாட்டின் அறிகுறிகளோ நான் நபிகளாரின் காணவில்லை. அவருக்குள் சுத்தமும், நேரக் கட்டுப்பாடும் எப்போதும் இருந்தது. தலைமுடி எப்போதும் எண்ணெய் தடவியபடி சீவி சுத்தமாக இருக்கும்.

அபுதாலிப் இன்னொரு அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார்: அவர்கள் எந்நேரமும் என்னுடன் தான் இருப்பார்கள். ஒருமுறை அவர்கள் படுக்கைக்குச் செல்லும்போது நான் : மகனே இருட்டாகத்தானே இருக்கிறது ஆகையால் ஆடையை அகற்றிவிட்டு உறங்குங்கள் எனக் கூறினேன்.(அந்த அறியாமைக் காலத்தில் மக்கள் புனித கஅபாவை கூட நிர்வாணமாக சுற்றி வருவார்கள்)
அப்போது இதைக்கேட்ட அவர்களுடைய முகத்தில் வெறுப்பைக் காண முடிந்தது. என் கருத்தையும் அவர்களால் மறுக்க முடியவில்லை. என்னிடத்தில் மறுபக்கம் திரும்பிப் படுக்கச் சொன்னார்கள். என் நிர்வாணத்தை யாரும் பார்ப்பதை நான் விரும்பவில்லை என்றும் கூறினார்கள். நான் எதிர் பக்கம் திரும்பி படுத்துக் கொண்டேன். பிறகு உடை மாற்றிக்கொண்டு போர்வையில் படுத்துக் கொண்டார்கள். நான் இரவில் கண்விழித்தபோது என் அன்பு மகன் இதுவரை பார்த்திராத அழகான உடை அணிந்து தூங்குவதைக் காண முடிந்தது. அந்த அறை நல்ல கஸ்தூரி வாசனையால் நிறைந்திருந்தது. நான் வியந்து போனேன்.

மேலும் அபுதாலிப் இவ்வாறு தொடர்கிறார்.பல இரவுகளில் அவர் தனது படுக்கையறையில் தனது மகனைப் பார்ப்பதில்லை. நான் பயந்த நிலையில் அவர்களை அழைப்பேன். விரைவில் அவர்கள் என் முன் தோன்றி ‘நான் இங்கே இருக்கிறேன்’ என்று கூறுவார்கள். பல இரவுகளில் நான் அறிமுகமில்லாத உரையாடல்களைக் கேட்பேன். சாப்பிடும் முன் பிஸ்மில்லாஹ் என்று சொல்வார்கள். அதன் பிறகு “அல்ஹம்துலில்லாஹ்” என்றும். இதற்கு முன்பு இதுபோன்ற ஒரு வழக்கத்தை நாங்கள் கண்டதில்லை. முஹம்மது நபி (ﷺ) அவர்களிடம் சிறுவயதிலேயே அவர் கவனித்த தனித்தன்மைகளை அவரது பாட்டனார் உணர்ந்தார். இவர் ஒரு அசாதாரண மனிதர் தான் என்று அவர் உறுதியாக நம்பினார்.

சில இக்கட்டான சூழ்நிலைகளில் அபூதாலிப் நபி(ﷺ) அவர்களின் உதவியை எவ்வாறு நாடினார் என்பதைப் பற்றி மேலும் படிப்போம்.

Mahabba Campaign Part-10/365

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிறப்பியல்புகளை நன்கறிந்தவர் அபூதாலிப். நெருக்கடி கட்டங்களில் நபி அவர்களின் இருப்பு தமக்கு ஒரு வரம் என்பதையும் அவர் அறிந்து வைத்திருந்தார்.

ஜல்ஹமது பின் அர்ஃபத் அறிவிக்கிறார்கள் “கடுமையானதோர் வறட்சி காலத்தில் மக்காவுக்குச் சென்றேன். குறைஷிகள் அபூதாலிபிடம் சென்று பள்ளத்தாக்குகள் வறண்டு விட்டன, குடும்பங்கள் பட்டினியால் வாடுகின்றன. எனவே தாங்கள் மழை வேண்டிப் பிரார்த்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அபூதாலிப் பிராத்தனை செய்ய முன்வந்தார். அவருடன் அழகானதோர் சிறுவரும் இருந்தார். அவரது முகம் தெளிந்த வானத்தில் பிரகாசிக்கும் முழு நிலவு போன்று இருந்தது. மேலும் அவர் நளிமான வெளிப்பாடுகளுக்குச் சொந்தக்காரராகவும் இருந்தார். அவரைச் சுற்றி இளைஞர்கள் சிலர் இருந்தனர்

அபூதாலிப் சிறுவரைச் சுமந்துக் கொண்டு கஃபாவுக்குச் சென்றார். கஃபாவின் சுவரோடு அச்சிறுவரை சேர்த்து அமர வைத்து, தன் கைகளால் தாங்கிப் பிடித்தார். அப்போது வானத்தில் சிறு மேகத் துண்டுகூட காணப்படவில்லை. சில நொடிகள் கடந்தன. எல்லா திசைகளிலிலிருந்தும் மேகங்கள் திரண்டு வந்தன. மழை பொழியத் தொடங்கியது. மக்காவும், பள்ளத்தாக்குகளும் குளிர்ந்தன.

இந்நிகழ்வைக் குறித்து பிற்காலத்தில் அபூதாலிப் அழகான கவிதையொன்றை படித்தார். அக் கவிதையை பாடச் சொல்லிக் கேட்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விரும்பினார்கள்.

ஒரு தடவை மதீனாவில் வறட்சி ஏற்பட்டபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்தனை புரிந்தார்கள். மழை பொழிந்து மதீனா நனைந்து குளிர்ந்தது. அப்போது கண்ணீர் மல்க நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “அபூதாலிப் இப்போது உயிருடனிருந்தால் மிகவும் மகிழ்வார் என்று கூறி விட்டு தோழர்களை நோக்கி “அபூதாலிப் சொன்ன கவிதை உங்களில் யாருக்காவது நினைவிருக்கிறதா? எனக் கேட்டார்கள். அங்கே இருந்த அபூதாலிபின் மகனார் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அந்தக் கவிதையைப் பாடினார்கள். அதைக் கேட்டு நபி அவர்கள் அகமகிழ்ந்தார்கள்.

அபூதாலிபின் வாழ்க்கையில் நடந்த அதிசயங்களுக்கு முடிவில்லை. அபூதாலிப் கூறியதாக அம்ர் பின் ஸயீத் அறிவிக்கிறார்கள் “நான் எனது சகோதர புத்திரர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் துல்மஜாஸ் எனுமிடத்தில் இருந்தேன். எனக்கு தாங்க முடியாத பசியும், தாகமும ஏற்பட்டது. என் அன்பு மகனே! எனக்கு மிகத் தாகமாக இருக்கிறது என்றேன். “தங்களுக்குத் தாகமாக இருக்கிறது அல்லவா” என்று என்னிடம் அவர் திருப்பிக் கேட்டார். ஆம்! என்றேன். அவர் தனது சின்னஞ்சிறு காலால் அருகில் இருந்த மெதுவாக பாறையை உதைத்தார். ஆச்சரியம்! அந்த இடத்திலிருந்து தண்ணீர் கொட்டத் தொடங்கியது, சுவை மிகுந்த நல்ல தண்ணீர். பாறையிலிருந்து அப்படியொரு நீரூற்றை நான் அதுவரைப் பார்த்ததில்லை. தாகம் தீரும்வரைக் குடித்தேன். அவர் தாகம் தீர்ந்ததா? என்று கேட்டார். ஆம்! தாகம் தீர்ந்தது என்றேன். மீண்டுமொரு முறை பாறையில் மிதித்தார். பாறை பழைய நிலைக்குத் திரும்பி தண்ணீர் வரத்து நின்றது. இமாம் இப்னு ஸஅத் இதைப் பதிவு செய்துள்ளார்fள்.

ஊர் மக்களின் கவனம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது முற்றாகத் திரும்பியபோது அபூதாலிப் தனது கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்தினார். வேதக்காரர்கள் மற்றும் ஜோசியர்களின் சூழ்ச்சியில் அகப்படாமல் பாதுகாத்தார்.

ஒரு தடவை அஸத் ஷனூஆ கோத்திரத்தாருக்கு நன்கு அறிமுகமான முகம் பார்த்து குறி சொல்லும் ஜோதிடர் ஒருவர் மக்காவுக்கு வந்தார். அவர் பெயர் லஹப் பின் அஹ்ஜான். மூட நம்பிக்கைகளில் ஊறிப் போன மக்கத்து மக்கள் தமது குழந்தைகளுடன் அவரைச் சந்திப்பர்.

அவர் அபூதாலிபுடன் இருந்த சிறுவரைப் உற்று நோக்கினார். அவரது கூரிய பார்வை அபூதாலிபை கவலை கொள்ளச் செய்தது. உடனே அபூதாலிப் சிறுவர் முஹம்மத் அவர்களை அங்கிருந்து அழைத்துச் சென்று விட்டார். பிறகு லஹப் அந்தச் சிறுவர் எங்கே என திரும்த் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தார். அந்தச் சிறுவரை மீண்டும் ஒரு முறை நான் பார்க்க வேண்டும். அவருக்கு பிரகாசமான எதிர் காலம் இருக்கிறது என்றார்.

பெற்றோரின் முழுப் பொறுப்பையும் நிறைவேற்றிக் கொண்டு அபூதாலிப் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஆதரவாகத் திகழ்ந்தார். நெடுந்தூரப் பயணங்களில்கூட நபி அவர்களை விட்டுப் பிரியாமல் தன்னுடன் அழைத்துச் சென்றார். அந்த சந்தர்ப்பங்கள் அபூதாலிபுக்கு அற்புதமான அனுபவங்களைத் தந்தன.

Mahabba Campaign Part-11/365

அன்பு மகனையும், மக்காவையும் பிரிந்திருப்பதில் அபூதாலிபுக்கு விருப்பமில்லை. என்றாலும் குடும்பச் சூழல் காரணமாக வணிகப் பயணங்களை தவிர்க்க இயலாத நிலை. மக்காவாசிகளின் முக்கிய வாழ்வாதாரம் வணிகத்தைச் சார்ந்திருந்தது. பருவ கால வர்த்தகப் பயணங்களால்தான் மக்காவின் தேவைகள் பூர்த்தியாயின.

இப்போதைக்கு மகனை பொறுப்பான ஒருவரிடம் ஒப்படைத்து விட்டு வர்த்தகப் பயணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்யலாம் என முடிவெடுத்தார் அபூதாலிப். பயண ஏற்பாடுகள் நிறைவடைந்தன. அப்போது நபி அவர்களின் முக பாவங்கள் மாற ஆரம்பித்தது. பெரிய தந்தையாரின் ஒட்டகக் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு “என்னை யாரிடம் ஒப்படைத்துச் செல்கிறீர்கள்? தாயும், தந்தையுமில்லாத நான் இங்கே தனியாக இருக்க முடியுமா? என்னையும் தங்களுடன் அழைத்துச் செல்லக் கூடாதா?” என கண்ணீர் வழியக் கேட்டார்கள்.

அபூதாலிப், தன்னைப் பிரிந்திருப்பதில் மகனுக்கு ஏற்பட்டுள்ள மன வலியைப் புரிந்துக் கொண்டார். பிரிவால் ஏற்படும் ஏக்கத்தின் காயத்தை உணர்ந்தார். மகனை வாரி அணைத்து பாசம் பொங்க அவர் கூறினார் “அல்லாஹ்மீது ஆணையாக! உம்மை என்னுடன் அழைத்துச் செல்வேன். உம்மை விட்டு பிரிந்திருக்க என்னாலும் இயலாது. உம்மை விட்டு நான் விலக மாட்டேன்.”

நான்காண்டுகள் கணமும் பிரியாத உறவின் தொடர்ச்சி. பன்னிரண்டு வயது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெரிய தந்தையாருடன் பயணக் குழுவில் சேர முடிவு செய்தார்கள். வர்த்தகக் குழு ஷாமுக்குப் புறப்பட்டது. (இன்றைய சிரியா)

வழியில் குறிப்பிட்ட இடங்களில் ஓய்வு எடுப்பர். பிறகு பயணத்தைத் தொடர்வர். அதுதான் வழக்கம். பயணக் குழு புஸ்ரா நகரத்தை (இன்றைய ஹவுரான்) அடைந்தது. வழக்கமாக குறைஷி வர்த்தகக் குழுக்கள் முகாமிடும் மரத்தடியில் முகாமிட்டனர்.

அதன் அருகில் ஒரு பாதிரியாரின் ஆசிரமம் இருந்தது. பாதிரியாரின் பெயர் ஜர்ஜிஸ். அக்கால வேத விற்பன்னர்களில் முதன்மையானவர். ஆன்மீகக் குருக்கள் வரிசையில் ஜர்ஜிஸ் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குப் பின் வந்த ஆறாவது நபராக இருந்தார். வரிசைத் தொடர் பின்வருமாறு ஈஸா அலைஹிஸ்ஸலாம், யஹ்யா அலைஹிஸ்ஸலாம், தானியேல் அலைஹிஸ்ஸலாம், பாதிரியார் நஸீஹா, பாதிரியார் நஸ்தூரஸ், இவரது மகன் மவ்ஈத், ஜர்ஜிஸ். அப்துல்லாஹ் அல்இஸ்பஹானி அவர்கள் இதைப் பதிவு செய்துள்ளார்கள்.

பஹீரா என்ற பெயரில் பாதிரியார் ஜர்ஜிஸ் அறியப்பட்டார். பஹீரா என்றால் ஆழமான அறிவு கொண்ட வேத அறிஞர் என்பது பொருள். இவர் யூத மத அறிஞரா? அல்லது கிறிஸ்தவ மத அறிஞரா என்பதில் முரண்பட்ட கருத்துகள் உள்ளன. முதலில் மூஸா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வழியையும், பிறகு ஈஸா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வழியையும் தொடர்ந்தவர் என்ற கருத்தும் உண்டு.

தனது ஆசிரமத்துக்கு அருகே முகாமிட்டிருந்த குறைஷி வர்த்தகக் குழுவை ஜர்ஜிஸ் கவனித்தார். அவர்களின் சில அம்சங்கள் அவரது கவனத்தை ஈர்த்தது.

அவர் நினைத்தார், “இந்தக் குழுவுடன் சேர்ந்து ஒரு மேகம் யாருக்காகப் பயணிக்கிறது? மேகம் நிழல் தரும் அந்த நபரை நான் எப்படி சந்திப்பது?. பொதுவாக நான் வெளியே செல்வதில்லை. பல வர்த்தகக் குழுக்கள் இவ்வழியே செல்வதுண்டு. அவற்றை நான் கவனிப்பதுமில்லை.”

இறுதியாக ஒரு யோசனை அவருக்குத் தோன்றியது. அந்த வர்த்தத் குழுவை அழைத்து விருந்தளிக்க முடிவு செய்து அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்றுக் கொண்டு குறைஷிகள் இரவு உணவுக்கு பஹீராவின் ஆசிரமத்துக்கு வந்தனர். வந்தவர்களை மிகுந்த மரியாதையுடன் வரவேற்றார் பஹீரா. வந்தவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி. பஹீரா சிறந்த அறிஞர். அவரது ஒளிரும் முகம், உன்னதமான நடத்தை விருந்தினர்களைக் கவர்ந்தன.

பஹீரா நிழல் தந்த அந்த மனிதரைக் குழுவில் தேடினார். அவரைக் காணவில்லை. அவர் குறைஷிகளிடம் “நான் உங்கள் அனைவரையும் விருந்துக்கு அழைத்தேன். எல்லாரும் வரவில்லையா? என்று கேட்டார். இதற்கிடையில் குழுவிலிருந்த ஒருவர் “நாங்கள் எத்தனையோ தடவைகள் இந்த வழியே பயணித்திருக்கின்றோம். வழக்கத்துக்கு மாறாக இப்போது எதற்காக விருந்தளிக்க முடிவு செய்தீர்கள்?” என்று கேட்டார்.

உண்மைதான்! நீங்கள் எங்களுடைய விருந்தினர்கள் அல்லவா! அதனால் அழைக்கலாம் என்று நினைத்தேன், அவ்வளவுதான். உங்கள் குழுவினரில் இனியும் யாரோ வர வேண்டும் என்று நினைக்கின்றேன்………… என்றார் பஹீரா.

Mahabba Campaign Part-12/365

“ஆம்! எங்களில் இளையவர் ஒருவர் வர்த்தப் பொருட்களுக்குக் காவலாக மரத்தடியில் ஓய்வெடுக்கிறார். பெரியவர்கள் எல்லாரும் வந்துள்ளோம்” என்றனர் குறைஷிகள்.

“அது சரி அல்ல! அவரையும் அழைத்து வாருங்கள்!” என்றார் பஹீரா.

குழுவிலுள்ள ஒருவர் சொன்னார் “அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத் அவர்களை தனியாக விட்டு விட்டு வந்தது முறையல்ல!” இதைக் கேட்டபோது பஹீராவின் மனம் குளிர்ந்தது. குறிப்பாக முஹம்மத் என்ற பெயரைக் கேட்டதும் பஹீராவின் உள்ளம் சிலிர்த்தது. வேத நூலான தோராவில் குறிப்பிடப்பட்டுள்ள அஹ்மத் என்பதையொத்த பெயர்.

ஒருவர் சென்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அழைத்து வந்தார். நபி அவர்கள் வந்து அபூதாலிபின் பக்கத்தில் அமர்ந்தார்கள். சிறுவரைப் பார்த்ததும் பஹீராவின் ஆன்மீகக் கண்கள் திறந்தன. மேகத்தின் நிழலில் பயணிக்கும் காட்சியும் நினைவில் விரிந்தது. “சிரமமான வர்த்தகப் பயணத்தில் இந்தச் சிறுவரை எதற்காக அழைத்து வந்தீர்கள்?” என்று பஹீரா கேட்டு விட்டு, பதிலை எதிர்பார்க்காமல் அச்சிறுவரை மிக உன்னிப்பாக பஹீரா நோட்டமிட்டார்.

வாக்களிக்கப்பட்ட தீர்க்கதரிசியின் அனைத்து குணாதிசயங்களையும் கொண்டவர் இவர். நபித்துவ முத்திரை குறித்தும் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் சட்டையைக் கழற்றச் சொல்லி தோள்களைப் பரிசோதிப்பது எப்படி? என்று யோசித்தார் பஹீரா.

விருந்து முடிந்தது. திரும்பிச் செல்வதற்காக எழுந்தனர் குறைஷிகள்.

அபூதாலிபை தனியாக அழைத்து “உங்களுடைய லாத் மற்றும் உஸ்ஸாவை முன்னிறுத்திக் கேட்கின்றேன், நான் கேட்பதற்கு உண்மையான பதிலைச் சொல்வீர்களா” என்று கேட்டார் பஹீரா. உடனே சிறுவர் இடைமறித்து “லாத், உஸ்ஸாவை முன்னிறுத்தி எதுவும் கேட்க வேண்டாம்” என்றார்.

“சரி! அல்லாஹ்வின் பெயரால் கேட்கின்றேன் என்று கூறி சில தனிப்பட்ட விஷயங்களைக் குறித்து கேட்டு பதில்களைப் பெற்றார். நபித்துவ முத்திரையையும் சோதித்தார். பஹீராவின் செய்கைகள் அபூதாலிபுக்கு ஆச்சரியத்தைத் தந்தது. “தாங்கள் எதை ஆய்வு செய்கிறீர்கள்” என்று அபூதாலிப் கேட்க, பஹீரா சொன்னார் “இவர் இறைவனால் உலகத்துக்குக் கருணையாக அனுப்பப்பட்ட நபி.”

“இதை எப்படித் தெரிந்துக் கொண்டீர்கள்?” என்று கேட்டபோது, வர்த்தகக் குழு வருவதை தூரத்தில் இருந்து நான் பார்த்துக் கொண்டிருந்தேன். பக்கவாட்டில் இருந்த மரங்களும், கற்களும் இவருக்கு ஸுஜூதுச் செய்வதைக் கண்டேன். ஒரு நபி மட்டுமே இத்தகைய மரியாதையைப் பெற முடியும். பின்னர் அவரது தோளில் இருந்த நபித்துவ முத்திரையும் கண்டேன். உங்கள் குழுவில் யாருக்கு மேகம் நிழல் தருகிறது என்பதையும் கவனித்தேன்.

பின்னர் அபூதாலிடம் கேட்டார் “இது யார்?
அபூதாலிப் சொன்னார் ”எனது மகன்”
பஹீரா “இல்லை! இந்தச் சிறுவரின் தந்தை உயிருடன் இருக்க வாய்ப்பில்லை!”
அபூதாலிப் “தாங்கள் கூறுவது சரிதான்! இவர் எனது சகோதரரின் மகன்.
பஹீரா “இவரது தந்தை எங்கே?”
அபூதாலிப் “இவரது தாயார் இவரைக் கர்ப்பமுற்றிருந்தபோது மவ்த்தாகி விட்டார்.”
பஹீரா “அல்லாஹ்! வாக்களிக்கப்பட்ட நபியின் அனைத்து அடையாளங்களும் இந்தச் சிறுவரிடம் உள்ளது. அபூதாலிப்! தங்களுடைய சகோதரர் மகனுடன் விரைவில் ஊர் திரும்புங்கள். யூதர்கள் அடையாளம் கண்டுக் கொண்டார்களானால் ஆபத்து ஏற்பட வாய்ப்புண்டு. வேதங்களால் முன்னறிவிப்பு செய்யப்பட்ட இந்த தீர்க்கதரிசி பெரும் புகழுக்குச் சொந்தக்காரர்.

ஆண்டுகள் பல காத்திருந்து வாக்களிக்கப்பட்ட இறைத் தூதரைச் சந்தித்த பஹீரா எனும் ஜர்ஜஸ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நபித்துவம் பெற்றிட முன்னரே காலமாகி விட்டார். சத்திய மார்க்கத்தில் உறுதியாக நம்பிக்கை கொண்டு மறுமை வெற்றியை எதிர்பார்த்து அவர் புறப்பட்டுச் சென்றார். அரை நூற்றாண்டு கால தேடல்களில் வெற்றி ஈட்டிய பின் அவரது இறுதிப் பயணம் அமைந்தது. நபியவர்களின் வரலாற்றில் என்றென்றும் பெயர் பொறிக்கப்பட்ட பஹீரா முடிவில்லாத நினைவுகளின் ஒரு பகுதியாக மாறினார்.

Mahabba Campaign Part-13/365

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பஹீரா சந்தித்த நிகழ்ச்சி பிரபலமானது. நபியவர்களின் வரலாற்றை எழுதிய அனைத்து வரலாற்றாசிரியர்களும் அந்நிகழ்வைப் பதிவு செய்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தின் மூலம் கிடைக்கப் பெறும் முக்கியமான சில தகவல்கள்

1. உலகம் ஒரு இறைத் தூதருக்காகக் காத்திருந்தது.

2. வேதங்களில் வரவிருக்கும் இறைத் தூதர் பற்றிய தகவல்கள் இருந்தன.

3. அத்தகவல்களை அறிந்த வேத விற்பன்னர்கள் அக்காலத்தில் வாழ்ந்தனர்.

4. வேதங்களில் கூறப்பட்ட பண்புகள் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அமைந்திருப்பதை கண்ட வேத விற்பன்னர்கள் நபி அவர்களைச் சிறப்பித்தனர்.

ஆனால் பிற்காலங்களில் வேதங்களில் பல சேர்க்கைகள் இணைக்கப்பட்டன, பலதும் மாற்றப்பட்டன. எனினும் இன்றும் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய பண்புகளைக் கூறும் பல பகுதிகள் பைபிளிலும், பிற வேதங்களிலும் உள்ளன. அவற்றைத் தொகுத்து நடத்திய ஆய்வுகளும் உள்ளன.

வேதக்காரர்களைக் குறித்து அல்குர்ஆன் கூறுகிறது “அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு ஒரு வேதம் வந்தது. அது அவர்களிடமிருந்த வேதத்தை உண்மையாக்கியும் வைக்கிறது. இதற்கு முன்பு (வாக்களிக்கப்பட்ட இறைத்தூதரை முன்நிறுத்தி) நிராகரிப்பவர்களுக்கு எதிராக தங்களுக்கு வெற்றியை அளிக்கும்படி அவர்கள் பிரார்த்தனை செய்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் (வருமென்று) நன்கறிந்திருந்த இவ்வேதம் அவர்களிடம் வந்தபொழுது அவர்கள் அதனை நிராகரிக்கின்றனர்” (2-89)

இறுதி நபியைப் பற்றிய விவாதங்கள் யூத, கிறிஸ்தவகளுக்கிடையே பரவலாக நடைபெற்றன. “வாக்களிக்கப்பட்ட நபியை அவர்கள் தமது சொந்தக் குழந்தைகளை அறிவதுபோல அறிந்திருந்தனர் என குர்ஆன் கூறுகிறது

பல தெய்வ நம்பிக்கையாளர்களுடன் தர்க்கம் செய்யும்போது அதை வெளிப்படையாகச் சொல்வார்கள். இறுதி நபியொருவர் வருவார், நாங்கள் அவருடன் சேர்ந்து வெற்றி பெறுவோம்” என்று கூறுவார்கள். ஆனால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அரேபிய மண்ணில் தோன்றினார்கள் என்பதை அறிந்ததும் அவர்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர்கள் தமது சுயநலத்துக்காக நபி அவர்களை எதிர்த்தனர். உலகியல் லாபத்துக்காக நபியவர்களை நிராகரித்தனர்.

நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூதாலிபுடன் சிரியாவுக்குச் சென்ற நிகழ்வுகளைக் குறித்து குறிப்பிட்டோம்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது இருபதாம் வயதில் அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடன் சிரியா சென்றதைச் சில வரலாற்றாசிரியர்கள் பதிவு செய்துள்ளனர்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது பதினெட்டாம் வயதில் ஒரு வர்த்தகக் குழுவுடன் சிரியாவுக்குச் சென்றார்கள். பயண வழியில் ஒரு மரத்தடியில் வர்த்தகக் குழு ஓய்வெடுத்தது. அப்போது அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பஹீரா என்ற பாதிரியாரைச் சந்தித்தார்கள். பாதிரியார் “மரத்தடியில் ஓய்வெடுப்பது யார்?” என்று கேட்டார். ”அப்துல் முத்தலிபின் மகன் அப்துல்லாஹ் என்பவரின் மகன்” என்றார்கள் அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்.

பஹீரா சொன்னார் “அவர் இம்மக்களின் உண்மையான இறைத் தூதர். ஈஸா நபி அவர்களுக்குப் பின்னர் யாரும் அந்த மர நிழலில் ஓய்வெடுத்ததில்லை” இந்நிகழ்வை இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள். ஆனால் இருபதாம் வயதில் நடத்திய இப்பயணத்தைக் குறித்து முக்கியமான சீறா நூற்களில் பதிவு செய்யப்படவில்லை. இச்சரித்திரத்தை நிராகரிக்க வேண்டியதில்லை என தலைசிறந்த வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு பயணத்தின்போது சந்தித்த பாதிரியாரொருவர் வாக்களிக்கப்பட்ட இறுதி நபியைப் பற்றிய தகவல்களைத் தெரிவித்தார் என்ற குறிப்புகளும் வரலாற்று நூற்களில் உள்ளன.

சில வரலாற்றாசிரியர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது தந்தை வழிச் சகோதரர் ஜுபைர் ரழியல்லாஹு அவர்களுடன் எமன் நாட்டுக்குச் சென்றதாகவும் பதிவு செய்துள்ளனர்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இளமைப் பருவம் மிகவும் முன்னுதாரணமாக அமைந்திருந்தது. அழுக்குகள் சூழ்ந்த நிலையிலும் மிகுந்த சுத்தத்தைக் கடைபிடித்தார்கள். கடின உழைப்பின் மூலம் பொருளீட்டி வாழ்வாதாரத்தை அமைத்துக் கொண்டார்கள்.

வாழ்வாதாரத்துக்காக கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடைபிடித்த வழிமுறைகளை இன்ஷா அல்லாஹ் இனி படிப்போம்.

Mahabba Campaign Part-14/365

மக்காவாசிகளின் முக்கியமான வருமான ஆதாரம் வர்த்தகமும், கால்நடை வளர்ப்புமாகும். கால் நடை வளர்ப்பு அவர்களது வாழ்வாதாரத்தின் ஒரு முக்கிய பகுதியாக இருந்தது. ஆடு மேய்த்தல் மிகவும் சிறந்த தொழில்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சிறு வயது முதற்கொண்டு மேய்க்கும் அனுபவம் உண்டு. பனூ ஸஅத் குடும்பத்தைச் சார்ந்த பிள்ளைகளுடன் சேர்ந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆடு மேய்க்கச் சென்றதை நபி அவர்களே நினைவு கூர்வதுண்டு. . குடும்ப உறுப்பினர்களின் ஆடுகளை இலவசமாகவும், மற்றவர்களின் ஆடுகளை பணம் பெற்றும் மேய்ப்பார்கள்.

நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் “நான் மக்கா வாசிகளின் ஆடுகளை சிறிய அளவிலான கூலிக்கு மேய்த்துள்ளேன்!”

ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள் “நாங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் அராக் மரத்தின் பழுத்த காய்களைப் பறித்துக் கொண்டிருந்தபோது நபி அவர்கள் “நிறம் வைத்த பழுத்த பழங்களைப் பறியுங்கள், நான் ஆடுகள் மேய்க்கும்போது அவற்றை பறிப்பதுண்டு” என்று கூறினார்கள். அப்போது “நபி அவர்களே! தாங்கள் ஆடு மேய்த்திருக்கிறீர்களா? என்று கேட்டோம். “ஆம்! எல்லா நபிமார்களும் ஆடு மேய்த்துள்ளனர்” என்றார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் “மூஸா அலைஹிஸ்ஸலாம் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும்போது நபியாக அனுப்பப்பட்டார்கள். தாவூது நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அவ்வாறு செய்தார்கள். மக்காவின் அஜியாத் என்ற இடத்தில் எனது குடும்பத்தாரின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் காலத்தில்தான் நான் நபியாக அனுப்பப்பட்டேன்” இச்செய்தியை அபூஸயீத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்

ஆடு மேய்ப்பதில் வாழ்வாதாரத்தைத் தவிர வேறு பல நன்மைகளும் உள்ளன. எதிர் காலத்தில் ஒரு பெரும் சமுதாயத்தை வழி நடத்தும் தலைவருக்கு இதன் மூலம் பயிற்சி கிடைக்கும்.

மந்தையை வழி நடத்திச் செல்பவர்கள் எப்போதும் விழிப்போடிருக்க வேண்டும். ஆடு பொதுவாக பலவீனமான உயிரினம். அவை குழுவை விட்டுத் தவறிச் செல்ல வாய்ப்புகள் அதிகம். ஓநாயிடம் சிக்காமல் கண்காணிக்க வேண்டும். திருடர்கள் திருடிச் சென்று விடாமல் பாதுகாக்க வேண்டும். மிகுந்த பொறுமையுடன் மட்டுமே இவற்றை செய்ய முடியும். இத்தகைய பயிற்சிகள் ஒருவருக்குத் தரும் நன்மைகள் ஏராளம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இந்த பயிற்சிகள் ஆடு மேய்த்தல் மூலமாகக் கிடைத்தது.

உலகப் புகழ் பெற்ற இமாம் இப்னு ஹஜர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள் “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உலகத் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னரும் இளம் பருவத்தில் ஆடு மேய்த்ததை நினைவு கூர்ந்து பேசுவார்கள்.” நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பணிவுக்கு இது ஓர் சிறந்த எடுத்துக்காட்டு. இல்லாமையிலிருந்து கிடைத்தவை அனைத்தும் அல்லாஹ்வின் அருட்கொடை என்ற எண்ணத்தின் வௌிப்பாடு இது!

இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நிதித் தூய்மையைப் பற்றி உரைக்கும் அத்தியாயமாகும். அதில் உழைப்பாளியின் மதிப்பு அடங்கியுள்ளது. அல்லாஹ் தனது இனிய தூதருக்கு எந்த முயற்சியும் இல்லாமல் செல்வத்தை வாரி வழங்கி இருக்க முடியும். ஆனால் மனித குலத்துக்கு ஒரு முன்மாதிரி நபி அவர்கள் மூலமாக நிறுவப்பட்டது, அனுமதிக்கப்பட்ட எந்தத் தொழிலையும் செய்யலாம்.

ஒப்பீட்டளவில் ஆடு மேய்த்தல் தரம் தாழ்ந்த தொழிலாக இருக்கலாம். ஆனால் அதை பெருமையாக எடுத்துரைத்தார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். ஆடு செல்வம் என்றும், ஒட்டகம் பெருமை என்றும் கூறுவார்கள். சுயமாக சம்பாதித்த உணவே சிறந்த உணவு எனவும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.

மக்களுடன் கலந்து பழகும்போதுதான் ஒருவரின் உண்மை நிலையை அறியலாம். நேர்மை, விசுவாசம், நீதி போன்ற நற்பண்புகளை அப்போதுதான் அனுபவித்து அறிய முடியும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆளுமையை அடையாளப்படுத்துவதற்கான வாய்ப்பாக அவர்களது நடவடிக்கைகள் அமைந்திருந்தன. சமூகத்துடன் இணைந்து வாழ்தல், அன்றாட காரியங்களில் மக்களுடன் ஒத்துழைத்தல், நன்மை செய்தல், தீமையை விட்டு விலகி இருத்தல், சமுதாயத்தில் முன்னுதாரணமாக இருத்தல் ஆகியன நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வழிமுறையாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இளம் பருவத்தை நேரடியாக அறிந்து, அவர்களின் நற்பண்புகளை அனுபவித்த காரணத்தால் மக்கா வாசிகள் ஒன்றிணைந்து வழங்கிய பட்டப்பெயர் அல்அமீன்-நம்பிக்கைக்குரியவர் என்பதாகும்.

பிரபல வரலாற்றாசிரியர் சர் வில்லியம் மூர் தனது The Life of Muhammed என்ற நூலில் “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இளமைக் காலம் என்றென்றும் முன்மாதிரியாக அடையளப்படுத்தப் படுவதை அவர்களின் வரலாற்றிலிருந்து நாம் படிக்கலாம்” என்று எழுதுகிறார்

Mahabba Campaign Part-15/365

ஆறாம் நூற்றாண்டில் மக்காவில் வாழ்ந்த சமுதாயம் மிகுந்த ஒழுக்கக் கேடுகளைக் கொண்டது. அவர்களுக்கிடையில் வாழ்ந்த ஒளிமயமான ஒரு இளைஞரைப் பற்றித்தான் நாம் படித்துக் கொண்டிருக்கின்றோம்.

பொய்யையும், துர்நடத்தையையும் கெட்டதாகப் பார்க்காத மக்கள்,
கேலிக்காகக்கூட பொய் சொல்லாத ஒரு இளைஞர்.

மதுவைப் புனித நீராக அல்லது குடி நீராகப் பயன்படுத்தும் மக்கள்,
ஒரேயொரு தடவைகூட மதுவைச் சுவைக்காத இளைஞர்.

எல்லாவிதமான தேவையற்ற விஷயங்களையும் செய்யும் மக்கள்,
எந்த அசுத்தத்தையும் திரும்பிக்கூட பார்க்காத இளைஞர்.
இப்படித்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவில் வளர்ந்தார்கள்.

இந்தப் புனிதமான வாழ்க்கைக்கு பின்னால் அல்லாஹ்வின் பிரத்யேகமான ஒரு காவல் இருப்பதை நாம் பார்க்கலாம்.

குறைஷிகள் கஃபாவைப் புனர் நிர்மாணம் செய்து வருகின்றனர். கற்கள் சுமப்பவர்களில் நபி அவர்களும், பெரிய தந்தையார் அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் உள்ளனர். உடைகளைக் அவிழ்த்து தோளில் வைத்து அதன் மீது கற்கள் எடுத்து வைத்து சுமப்பது அன்றைய வழக்கம். ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆடைகளைக் களையாமல் கற்கள் சுமந்துக் கொண்டிருந்தார்கள்.

இரக்கப்பட்ட அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் “மகனே! ஆடைகளைக் களைந்து தோளில் வைத்து கற்கள் சுமக்கலாமே!” என்று கூறினார்கள். ஆனால் நபி அவர்கள் ஆடை களைவதற்கு மறுத்து விட்டார்கள். பின்னர் அவர்கள் இருவர் மட்டும் இருந்தபோது பெரிய தந்தையாரின் அபிப்ராயத்தை மதித்து ஆடையைக் களையத் தொடங்கியதும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மயக்கமுற்று விழுந்து விட்டார்கள். அவர்களது கண்கள் வானத்தை நோக்கி இருந்தது. சுயநினைவு வந்ததும் “என்ன ஆயிற்று?” என்று கேட்டபோது “நான் நிர்வாணமாக இருக்க தடை விதிக்கப்பட்டுள்ளேன்” என்றார்கள்.

நபித்துவம் அறிவிக்கப்படும் முன்னரே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாவமற்றவர்களாக இருந்தார்கள் என்பதற்கு இச்சம்பவமும் ஒரு சான்றாகும். இந்நிகழ்வை இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களும் பதிவு செய்துள்ளார்கள். இச்சம்பவத்திற்கு முன்பும் ஒரு முறை சிறுவர்களுடன் கற்கள் சுமந்து சென்ற நேரத்தில் ஆடையைக் களையக் முற்பட்டபோது “ஆடை அணியுங்கள்” என்ற அசரீரி கேட்டதுடன் பின்புறத்திலிருந்து யாரோ முதுகில் அடிக்கவும் செய்தனர். ஆனால் வேதனை ஏற்படவில்லை, ஆளைக் காணவும் செய்யவில்லை.

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறிய மற்றொரு சம்பவமும் உண்டு. ஒரு முறை அபூதாலிப் ஜம்ஜம் கிணற்றைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அவருடன் இணைந்து கற்கள் சுமந்தார். சிறுவர் மீது இரக்கம் கொண்ட ஒரு முதியவர் உடைகளைக் களைந்து தோளில் வைத்து கொடுக்க முற்பட்டார். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நினைவற்று விழுந்தார்கள். நினைவு திரும்பியதும் “என்ன நடந்தது?” என அபூதாலிப் கேட்டபோது, “நன்றாக உடையணிந்த ஒருவர் என்னிடம் வந்து “நீங்கள் உடலை மறைத்துக் கொள்ளுங்கள்” என்று சொன்னார் எனக் கூறினார்கள். நபித்துவத்துக்கு முன்னர் வஹீ வந்த முக்கியான நிகழ்வாக இதனை அறிஞர்கள் கருதுகின்றனர்.

ஒழுக்கத்தின் உருவகமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்க்கை அமைந்திருந்தது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னதாக அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் “ஜாஹிலிய்யா கால மக்கள் செய்த எந்த அசுத்தமான செயலையும் செய்திட நான் நினைத்ததுகூட இல்லை. ஆனால் இரண்டு தடவைகள் அப்படிப்பட்ட சந்தர்ப்பம் ஏற்பட்டபோது அல்லாஹ் என்னைக் காப்பாற்றினான்.

நண்பர்களுடன் சேர்ந்து நான் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த காலம். ஒருநாள் அவர்களிடம் “இன்றைக்கு என் ஆடுகளைப் பார்த்துக் கொள்ளுங்கள். நான் ஊருக்குச் சென்று நண்பர்களுடன் பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் கலந்து விட்டு வருன்றேன்” என்று சொன்னேன். அவர்கள் ஒப்புக் கொண்டனர். நான் மக்காவை அடைந்தேன். ஒரு வீட்டிலிருந்து ஆரவாரங்கள் கேட்டது. “என்ன சப்தம் அது?” என்று கேட்டேன். ஒரு திருமணத்தையொட்டிய பொழுது போக்கு நிகழ்வுகள் நடந்துக் கொண்டிருப்பதை அறிந்தேன். நான் அங்கு சென்று ஒரு இடத்தில் அமர்ந்ததும் தூங்கி விட்டேன். நிகழ்ச்சிகள் எல்லாம் முடிந்து அதிகாலையான பின்தான் விழித்தெழுந்தேன். அங்கு நடைபெற்ற எந்தவொரு நிகழ்விலும் நான் கலந்துக் கொள்ளவில்லை. பின்னர் ஆடு மேய்க்கும் நண்பர்களிடம் திரும்பி வந்தேன். அவர்கள் திருமண நிகழ்வுகள் குறித்துக் கேட்டனர். நடந்ததை அவர்களிடம் சொன்னேன். இதே போன்றதொரு சம்பவம் பின்பொரு முறையும் நடந்தது. பிறகு ஒருபோதும் இப்படியொரு நிகழ்வில் கலந்துக் கொள்ள நான் ஆசைப்பட்டதில்லை.”

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நம்பிக்கை சார்ந்த ஆசார-அனுஷ்டானங்களில் தனிக்கவனம் செலுத்தினார்கள் என்பதை பல சம்பவங்கள் நிரூபிக்கின்றன.

Mahabba Campaign Part-16/365

மக்கா நகரில் நடைபெற்றுக் கொண்டிருந்த மிகக் கடுமையான குற்றச் செயல்களில் முக்கியமானது பல தெய்வ வழிபாடு ஆகும். அதன் ஒரு பகுதியாக சிலை வழிபாடும் பரவலாக இருந்தது. வெவ்வேறு பிரிவினர் வெவ்வேறு கடவுள்களையும், சிலைகளையும் வணங்கிக் கொண்டிருந்தனர். ஏக இறைவனை மட்டும் வணங்கி வழிபடுவதற்காகக் கட்டப்பட்ட கஃபாலயத்தின் உள்ளேயும், வெளியேயும் சிலைகள் நிறுவப்பட்டன.

சரியான ஏகத்துவக் கொள்கை மக்காவில் ஒரு சிலரிடம் மட்டுமே இருந்தது. மனித இனம் உருவானது முதல் மக்காவில் அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்கி வந்தனர். நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காலத்தில் முதலாவதாக உருவ வழிபாடு தொடங்கியது. அரபு நாடுகளில் அம்ர் பின் லஹியா என்பவர் முதன் முதலாக சிலையை உருவாக்கினார். நபிமார்களின் போதனைகளைப் பெறாத மக்கா வாசிகள் சிலை வணக்கத்தில் ஈர்க்கப்பட்டனர். மூஸா அலைஹிஸ்ஸலாம் மற்றும் ஈஸா அலைஹிஸ்ஸலாம் ஆகியோரின் சீடர்கள் சத்தியச் செய்தியை பிரச்சாரம் செய்தபோதும் மக்கத்து மக்கள் அதனை ஏற்கவில்லை.

இத்தகைய மக்கள் வாழ்ந்துக் கொண்டிருந்த மோசமான காலச் சூழலில் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இளமைக் காலம் சென்றுக் கொண்டிருந்தது. எனினும் ஒரு தடவைகூட அவர்கள் பல தெய்வ வழிபாட்டில் பங்கேற்கவில்லை. எந்தச் சிலையையும் வணங்கவில்லை. படைத்தவன் அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு ஒரு சிறப்புப் பாதுகாப்பு இருந்தது.

இது தொடர்பான சில நிகழ்வுகளைப் பார்ப்போம்

1. அலீ ரழியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள். ஒருவர் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டார் “தாங்கள் எப்போதாவது சிலைகளை வணங்கி இருக்கின்றீர்களா? எப்போதாவது மது அருந்தி இருக்கின்றீர்களா?

“இல்லை! அவர்கள் இறை நம்பிக்கையின்மை (குஃப்ர்) கொண்டிருந்தார்கள் என்பதை அன்றே நான் அறிவேன் என்றார்கள்

2. நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உதவியாளர் ஜைத் பின் ஹாரிதா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருபோதும் சிலை வணக்கம் செய்ததில்லை. நபித்துவம் அருளப்படுவதற்கு முன்பே சிலை வணக்கத்தை வெறுத்தார்கள். அன்றைய மக்கா வாசிகள் கஃபாவை வலம் வரும்போது இசாஃபா மற்றும் நாயிலா எனும் சிலைகளை தொட்டு வணங்குவார்கள். ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதைக்கூட செய்ததில்லை” என்று கூறகிறார்கள்.

3. வளர்ப்புத் தாய் உம்மு அய்மன் ரழியல்லாஹு அன்ஹா கூறுகிறார்கள் “குறைஷிகள் புவானா எனும் சிலையை வணங்குவர். ஆண்டுதோறும் அதன் முன்னிலையில் ஆண்டு விழா நடத்தப்படும். பலி கொடுத்து, தலை மொட்டையடிப்பார்கள். திருவிழா இரவு முழுக்க பஜனைகள் நடைபெறும்.

அவ்விழாவில் பங்கேற்பதற்காக அபூதாலிப் குடும்பத்தினரை அழைத்துச் செல்வார். ஆனால் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பலமுறை அழைத்தாலும் மறுத்து ஒதுங்கி இருப்பார்கள். அபூதாலிபுக்கு இது பிடிக்கவில்லை. அத்தைகள் “நமது குடும்ப உறுப்பினர்கள் கலந்துக் கொள்ளும் இவ்விழாவிலிருந்து ஏன் விலகி இருக்கிறீர்கள்? நம் கடவுளை நிராகரிக்கிறீர்களா? நம்முடைய பலத்தைக் காட்ட வேண்டிய நேரத்தில் எங்களை விட்டு விலகி நிற்கிறீர்களா? என்று கேட்பர்.

தயக்கத்துடன் அவர்களுடன் செல்லத் தீர்மானித்து, அவர்கள் நடந்த திசையில் நடந்துச் செல்லத் தொடங்கிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிறிது நேரம் எங்கள் கண்களிலிருந்து மறைந்தார்கள். பின்னர் பயந்து நடுங்கியவாறு எங்களை நோக்கி ஓடி வந்தார்கள். “என்ன நடந்தது?” என அத்தைகள் கேட்க, “எனக்கு ஏதோ ஆயிற்று என்று தோன்றுகிறது” என்று கூறினார்கள்

“எங்கள் மகனை பேய் பிடிக்காது. தங்களுடைய நடவடிக்கைகள் அப்படித்தான் இருக்கிறது. இப்போது என்ன நடந்தது என்பதைச் சொல்லுங்கள்” என்றனர்.

நான் திருவிழா நடைபெறும் பகுதிக்குச் சென்றேன். குலதெய்வத்தை அடைந்தபோது வெள்ளாடை அணிந்த உயரமான ஒருவர் தோன்றி உரத்த குரலில் “முஹம்மத்! திரும்பிச் செல்லுங்கள், சிலையை நெருங்காதீர்கள்” என்று சொன்னார். பின்னர் இது போன்ற ஒரு பண்டிகைக்கும் அவர்கள்சென்றதில்லை.”

4. தேனிலவு சமயத்தில் அன்பு மனைவி கதீஜா அம்மையார் ரழியல்லாஹு அன்ஹா அவர்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் “நான் லாத்தையும், உஸ்ஸாவையும் ஒருபோதும் வணங்க மாட்டேன்.” அன்னையவர்கள் சொன்னார்கள் “தாங்களும் அவற்றை விட்டுவிடுங்கள்.”

நபித்துவத்துவத்தை அறிவிக்க முன்னர் தூய்மைக்கான விதிகள்.

இருண்ட சுற்றுப் புறங்களுக்கு மத்தியில் பொன்னொளியுடன் நடந்துச் செல்லும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எனும் இளைஞர், சமூகப் பிரச்சனைகளைக் கையாள்வதோடு, நீதியையும், தைரியத்தையும் அடையாளப்படுத்தும் காட்சிகளைத் தொடந்து வாசிக்கலாம் இன்ஷா அல்லாஹ்!

Mahabba Campaign Part-17/365

மூகப் பிரச்சனைகளில் தலையிடும் ஒரு இளைஞரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களில் காணலாம். மக்காவிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பல ஆண்டுகளாகத் தொடர்ந்துக் கொண்டிருந்த ஒரு இனக் கலவரத்தை ஹர்புல் ஃபிஜார் அல்லது முரடர்களுடைய போர் என்று வரலாறு பதிவு செய்துள்ளது.

அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வயது பதினைந்து. ஒரு புறம் குறைஷிகள் மற்றும் கினானா கோத்திரத்தினர். மறு புறம் ஹவாசினைப் பூர்வீகமாகக் கொண்ட கைஸ் மற்றும் அயலான் கோத்திரத்தினர். குறைஷிகளின் தலைவராக ஹர்ப் பின் உமைய்யா என்பவர் இருந்தார்.

மக்காவின் புகழ் பெற்ற உக்காழ் சந்தையில் ஒருவருக்குத் தங்குமிடம் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறையொட்டி நான்கு சண்டைகள் நடந்தன. நான்காவது சண்டையின்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெரிய தந்தையாரின் மக்களுடன் சேர்ந்து போர்க்களம் சென்றார்கள். போரில் அவர்கள் நேரடியாகப் பங்கு பெறவில்லை. சிதறிய அம்புகளை சேகரிக்க உதவி செய்தார்கள். இதற்கிடையில் அம்பு எய்திட வேண்டிய சில சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன. அதுகூட தேவையில்லாத செயல் என பிற்காலத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவதுண்டு.

போரின் முதற்கட்டத்தில் மதியத்துக்கு முன் ஹவாஸின் கோத்திரத்தினர் வெற்றி பெற்றனர். மதியத்துக்குப் பின்னர் குறைஷிகள் வெற்றி பெற்றனர். நியாயம் குறைஷிகள் பக்கம் இருந்தாலும் அவர்களே சமாதான முயற்சிகளை ஆரம்பித்தனர். இந்த இரத்தக் களரியை முடிவுக்குக் கொண்டு வர விரும்பினர். ராணுவத் தளபதி உத்பா பின் ராபீஆ நேரடியாகக் களத்தில் குதித்தார். இரு தரப்பினரும் சில உறுதி மொழிகள் எடுத்தனர். அதன் மூலம் அமைதி திரும்பியது. அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வயது இருபது.

சமூக நடப்புகள் சிலதை அனுபவித்தறியும் வாய்ப்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குக் கிடைத்தது. அவர்களது திறமையையும், தைரியத்தையும் பிறரும் அனுபவித்தனர். பிற்கால நடவடிக்கைகளின்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்தக் காட்சிகளை நினைவு கூர்வார்கள். அதைத் தம் தோழர்களிடமும் பகிர்ந்துக் கொள்வார்கள்.

தொடர்ந்து மக்காவில் ஒரு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்துக்கு ஹில்ஃபுல் ஃபுழூல் என்று பெயர். அமைதிப் பிரியர்கள் சிலரால் அவ்வொப்பந்தம் உருவாக்கப்பட்டது. போர் மற்றும் வன்முறையைத் தவிர்க்கும் வகையில் அவ்வொப்பந்தம் இருந்தது.

ஸுபைத் கோத்திரத்தைச் சார்ந்த ஒருவர் தனது வியாகாரப் பொருட்களுடன் மக்காவுக்கு வந்தார். மக்காவின் பிரமுகரான அவ்ஸ் பின் வாயில் என்பவர் விலை நிர்ணயம் செய்து பொருட்களை வாங்கினார். ஆனால் பேசிய விலையை அவர் கொடுக்கவில்லை. அவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி வியபாரியை மிரட்டினார்.

மன உளைச்சலுக்கு ஆளான வணிகர் மக்காவின் பிரமுகர்கள் பலரிடம் புகார் செய்தார். ஆனால் அவ்ஸ் பின் வாயிலிடம் சென்று நியாயம் கேட்க யாரும் முன்வரவில்லை. அவ்ஸ் மக்காவின் முதலாளித்துவச் சுரண்டலின் அடையாளமாகத் திகழ்ந்தார்.

தடுமாறிய வியாபாரி ஒரு உத்தியைக் கையாண்டார். மறுநாள் காலை அபூகுபைஸ் மலை மீது ஏறினார். மக்காவில் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தை ஒரு கவிதையாகச் சொன்னார். அவரது துயரமும், ஒரு மக்காவாசியின் வன்முறையும் அடங்கிய பாடல் வரிகள் அவை.

மக்காவின் பிரமுகர்கள் கஃபாவில் கூடி இருந்த நேரமது. அனைவரும் இக்கவிதையைக் கேட்டனர். வெளிநாட்டு வியாபாரி ஒருவரை மக்காவைச் சார்ந்த ஒருவர் ஏமாற்றியதை அவமானமாகக் கருதினர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெரிய தந்தையாரின் மகனும், சுயமரியாதைக்காரருமான ஜுபைர் களத்தில் குதித்தார். அவ்ஸை சும்மாவிடக் கூடாது எனக் கூறி மற்றவர்களின் கவனத்தை ஈர்த்தார். மக்காவின் அனைத்து பிரபல கோத்திரத் தலைவர்களும் அழைக்கப்பட்டனர். அப்துல்லாஹ் பின் ஜுதான் என்பவரின் வீட்டில் ஒரு ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

“மக்காவில் பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். நீதிக்காக ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் என்ற விஷயத்தில் நாம் உறுதிமொழி எடுக்க வேண்டும். கடலில் ஒரு துளி தண்ணீர் இருக்கும்வரை இந்த ஒப்பந்தம் நீடித்திருக்க வேண்டும். ஹிரா, ஸபீர் மலைகள் நகராத வரை இந்த ஒப்பந்தம் அமுலில் இருக்க வேண்டும்” என்று ஜுபைர் கூறினார். அனைத்து கோத்திரத் தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். உணவு உண்டு, கையெழுத்திட்டனர். ஒவ்வொருவராக அஸ்வத் பின் வாயிலின் வீட்டிற்குச் சென்றனர். வணிகரின் அனைத்து பொருட்களையும் திரும்பப் பெற்று வியாபாரியிடம் ஒப்படைத்தனர். இத்துடன் ஹில்ஃபுல் ஃபுழூல் அமைதிக் கூட்டணி அமலுக்கு வந்தது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜுபைர் அவர்களுடன் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அமைப்பாளராகச் செயலாற்றினார்கள். உலகம் முழுவதும் நீதியை நிலைநாட்டப் போகும் ஒரு மகாமனிதர், தனது இளமையிலேயே அமைதியின் காப்பாளராக இருந்தார்கள்……….

Mahabba Campaign Part-18/365

நபி ﷺ அவர்கள் அமைதி ஒப்பந்தத்தைப் பற்றி மிகுந்த ஆர்வத்துடன் பேசுவார்கள். “நான் எம் இளமைப் பருவத்தில் ​​எமது தந்தைவழி சகோதரர்களுடன் உடன்படிக்கையில் கலந்துகொண்டேன். சிவப்பு ஒட்டகமந்தைகளை உரிமையாக்குவதை விட இது எனக்கு மிகவும் மதிப்பு வாய்ந்தது.மற்றொரு அறிவிப்பில், “அப்துல்லாஹி பின் ஜுத்ஆனின் வீட்டில் நானும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன். இஸ்லாத்தில் இருக்கும் போது என்னை அழைத்தாலும் அத்தகைய ஒப்பந்தத்தில் நான் பங்கேற்பேன்.

இந்த ஒப்பந்தத்தின் காரணமாக மக்காவில் பல குறிப்பிடத்தக்க நல்ல செயல்கள் செயல்படுத்தப்பட்டன. வன்முறை நிறுத்தப்பட்டது. இப்படி ஒரு சம்பவத்தை படிப்போம். கஸ்அம்
கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் தனது குடும்பத்துடன் மக்காவுக்கு புனித யாத்திரைக்கு வந்தார். அக்குழுவில் இருந்தவரின் அழகிய மகள் ‘அல் கதூல்’ நபீஹ் என்ற ஆசாமியால் கடத்தப்பட்டாள். பயனாளிகள் முற்றிலும் பயந்தார். யாரிடம் புகார் செய்வது? ஆம், “முழுமையான ஒப்பந்தத்தில்” கையெழுத்திட்டவர்களிடம் புகார் செய்யுங்கள். ஒருவர் கருத்து தெரிவித்தார். எனவே அவர் கஅபாவின் முன் வந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்களை அழைத்தார்.
எனக்கு உதவுங்கள் என்றார்.
உடன்படிக்கையில் சம்பந்தப்பட்டவர்கள் ஓடி வந்தனர். புகார்தாரருக்கு உதவி உறுதி செய்யப்பட்டது. அவர்கள் ஒரு குழுவாக ஆயுதம் ஏந்தி, அவருடைய கோத்திரத்தைச் சேர்ந்தவர்களுடன் நபீஹின் வீட்டிற்கு வந்தனர். சிறுமியை விடுவிக்க கோரினார்கள். “ஃபுலுல்’ உடன்படிக்கையை நினைவுபடுத்தினார்கள். வேறுவழியின்றி நபிஹ் ஒரு நிபந்தனையுடன் சிறுமியை விடுவிக்க ஒப்புக்கொண்டார். ‘இந்த ஒரு இரவு மட்டும் அவளை எனக்குக் கொடு’. தலைவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. ஒட்டகத்தின் பாலை சுரக்கும் நேரம்கூட அவளை உன்னிடம் வைக்கக்கூடாது. கடைசியில் அவளை விட்டுவிட்டான்.

சிறு வயதிலேயே, அரேபியாவின் கலாச்சாரத் துறையில் நீதி வெளிச்சம் காட்டும் வாய்ப்பு நபிகள் நாயகம்ﷺ அவர்களுக்குக் கிடைத்தது.

ஒவ்வொரு நிகழ்வும் நபி (ﷺ) அவர்களை மக்காவில் ஒரு முக்கிய நபராக உயர்த்தியது. மக்காவாசிகள் பலருக்கு நபி(ﷺ) அவர்களைப் பார்க்காத ஒரு நாள் மந்தமான நாளாக இருந்தது. அவர்கள் இல்லாத உணவு சுவையாக இல்லை.

நபிகள் நாயகம் (ﷺ) அவர்கள் தம் வாழ்வாதாரத்திற்காக மற்றவர்களைச் சார்ந்திருக்கவில்லை. அதற்காக ஆடு மேய்க்கும் பணியில் ஈடுபட்டார்.

நபி(ﷺ) அவர்களுக்கு இருபத்தி நான்கு வயது. அபூதாலிப் நபி (ﷺ) அவர்களை வியாபாரம் செய்ய அழைத்தார். நபிகள் நாயகம் (ﷺ) அவர்களிடம் மக்காவில் உள்ள ஒரு நல்ல வியாபாரியான கதீஜாவின் வியாபாரம் ஒப்படைக்கப்பட்டது. ஆட்டை மேய்த்து வாழ்ந்திருந்த நாயகம்ﷺஅவர்கள் அன்று முதல் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் சந்தைக்கு செல்ல ஆரம்பித்தார்கள். இவை அனைத்தும் வருங்காலத்தில் கிடைக்கும் பதவிக்காக எல்லாம் வல்ல அல்லாஹ் ஏற்பாடு செய்யும் சில பயிற்சிகள்.

நபி (ﷺ) அவர்களின் வர்த்தகப் பயணத்திற்கும் சில ரகசியங்கள் உள்ளன. கதீஜாவின் உதவியாளர் ‘நஃபிஸா பின்த் முன்யா’ அதை விளக்குகிறார். அது துல் ஹஜ் மாதத்தின் பதினான்காம் நாள். நபி(ﷺ) அவர்களுக்கு இருபத்தைந்து வயதுதான். மக்காவாசிகள் நபி (ﷺ) அவர்களை ‘அல்-அமீன்’ என்று அழைக்கிறார்கள். அபூதாலிப் நபி (ﷺ) அவர்களை அணுகினார். ‘என் அன்பு மகனே, நமது நிலைமை உனக்குத் தெரியும். வறுமையை கடந்து வருகிறோம். வர்த்தகம் அல்லது பிற வருமான ஆதாரங்கள் ஏதும் இல்லாமல் தவிக்கிறோம். இப்போது மக்கள் வியாபாரத்திற்காக ஷாம் நாட்டிற்கு செல்கிறார்கள். குவைலிதின் மகள் கதீஜா, நமது குடும்ப உறுப்பினர்கள் பலரைத் தன் வணிகப் பொருட்களை வியாபாரம் செய்ய அனுப்புகிறார். அன்பு மகனே, நீங்கள் கதீஜாவை அணுகவும். அவள் உங்கள் கோரிக்கையை மறுக்கமாட்டார்கள். மக்காவில் உங்கள் நற்பெயர் மற்றும் அந்தஸ்து பற்றி அவர் அறியாமல் இருக்க வாய்ப்பில்லை.
உண்மையில், உங்களை ஷாமிற்கு அனுப்புவதில் எனக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. யூதர்கள் உங்களை அடையாளம் தெரிந்து கொள்வதையும், ஆபத்தில் சிக்குவதையும் நான் அஞ்சுகிறேன். ஆனால் வேறு வழிகள் இல்லை.

குவைலிதின் மகள் மக்காவின் பிரபல வியாபாரி. மக்காவை விட்டு வெளியேறும் வாகனங்களின் ஒட்டகங்களில் பெரும்பாலானவை கதீஜாவுக்கு சொந்தமானவை. அவர் பிரதிநிதிகளை நியமித்து, வணிகப் பொருட்களுடன் ஷாம் நாட்டிற்கு அனுப்புவார். சில நேரங்களில் வெகுமதி நிர்ணயிக்கப்படுகிறது. அல்லது இலாப சதவீதம் வழங்கப்படும் என்ற நிபந்தனையின் பேரில் அனுப்பப்படும்.

நபி(ﷺ) அவர்கள் தமது பெரிய தந்தையின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டார். ஆனால் பதில் பின்வருமாறு இருந்தது. “கதீஜாவுக்கு நான் தேவைப்பட்டால், அவள் யாரையாவது அனுப்பட்டும். நான் ஷாமிற்கு
ஒரு பிரதிநிதியாகச் செல்கிறேன்.

என் அன்பு மகனே, நீங்கள் அங்கு செல்வதற்குள் அவர் வேறு ஒருவருடன் உடன்பட்டால் நாங்கள் என்ன செய்வோம்? எங்கள் நம்பிக்கைகள் சிதைந்துவிடும். அபுதாலிப் பதிலளித்தார்.

இந்த உரையாடல் எப்படியோ கதீஜாவின் காதுகளுக்கு சென்றது.கதீஜா ஒரு தூதரை அனுப்பி, “முஹம்மது (ﷺ) அவர்கள் வியாபார குழுவை வழிநடத்துவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.” என்று கூறச் சொன்னார்கள். கதீஜா நாயகத்தை தன் இல்லத்திற்கு அழைத்தார். பேச்சு வார்த்தை தொடங்கியது. உங்கள் விசுவாசமும் ஆளுமையும் எனக்குத் தெரியும்.
நீங்கள் எனது வியாபார குழுவை வழிநடத்தத் தயாராக இருந்தால், வேறு யாரையும் விட இரண்டு மடங்கு அதிகமாக நான் உங்களுக்குச் செலுத்த முடியும். நபி(ﷺ) அவர்கள் ஒப்புக்கொண்டார்கள். பின்னர் அபுதாலிபுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். மேலும் அவர் இவை அனைத்தும் வல்ல அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய பொன்னான வாய்ப்பு என்று கூறினார். நபி(ﷺ) அவர்கள் கதீஜாவின் பொருட்களை எடுத்துக்கொண்டு சிரியாவுக்குச் செல்ல முடிவு செய்தார்கள்.

Mahabba Campaign Part-19/365

கதீஜா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் தன் வேலைக்காரர் மைசராவை நபிﷺ அவர்களுடன் அனுப்பினார்கள். கதீஜா (ரழியல்லாஹு அன்ஹா ) அவர்கள் மைசராவுக்கு சில அறிவுரைகளை வழங்கினார்கள். ‘நீங்கள் அவருக்கு முழுமையாகக் கீழ்ப்படிய வேண்டும். அவர் சொல்வதை எதிர்த்து எதுவும் பேசக்கூடாது. ஆம். மைசாரா ஒப்புக்கொண்டார்.
அபு தாலிப் தேவையான அறிவுரைகளை அளித்து தனது மகனை வழி அனுப்பினார். அபுதாலிபின் சகோதரர் சுபைரும் அந்த கூட்டத்தில் இருந்தார்கள். முஹம்மது(ﷺ) அவர்களை குறிப்பாக கவனிக்க வேண்டுமென்று அபூதாலிப் ஸுபைரிடத்தில் கேட்டுக்கொண்டார்.
மைஸரா நபிﷺ அவர்களைக் கவனமாகப் பின்பற்றினார். பயணத்தின் ஆரம்பத்திலிருந்தே நிறைய அற்புதங்கள் தெண்பட தொடங்கின. நபிﷺ அவர்களின் பயணுத்துடன் மேகமும் நகர்ந்து கொண்டிருந்தது.
சில சமயங்களில் இரண்டு மலக்குமார்கள் சூரியனிலிருந்து குறிப்பாக நாயகத்திற்க்கு மட்டும் நிழலை வழங்கினர். அவ்வாறு அவர்களது பயணம் சிரியாவில் உள்ள “புஸ்ரா” நகரை அடைந்தது. அங்கே ஒரு மரத்தடியில் முகாமிட்டு அங்கேயே ஓய்வெடுத்தார்கள். அந்த மரத்திநருகில் ‘நஸ்துரா’ என்ற பாதிரியார் வசித்திருந்தார். இவருடன் மைசாராவுக்கு முன்பே பழக்கம் இருந்தது. பாதிரியார் முஹம்மது நபிﷺயை கவனித்தார். பிறகு மைசாராவிடம் கேட்டார். ‘அங்கே ஓய்வெடுக்கும் மனிதன் யார்? அவர் குரைஷிகளில் ஒருவர். மக்காவின் ஹரமில் வசிக்கிறார்- மைசாரா பதிலளித்தார். சரி, பாதிரியார் சொல்ல ஆரம்பித்தார். “இங்கே வந்தவர் கடைசி நபியாக இருக்க வாய்ப்பு அதிகம். நமது முன்னோர்கள் அப்படிச் சொல்லியிருக்கிறார்கள். அவருடைய கண்களில் சிவப்பு நிறத்தை நீங்கள் கவனித்தீர்களா? ஆம் இருக்கிறது. அது எப்போதும் இருக்கிறதா? ஆம், நான் அப்படியில்லாமல் அவரை பார்த்ததில்லை.
எனவே அவர் மைசாராவிடம் பல அறிகுறிகளைப் பற்றி கேட்டார், பின்னர் பாதிரியார், ‘இவர்தான் இறுதி முஹம்மது நபிﷺ ஆவர்கள். அவர் நபியாக நியமிக்கப்படும்போது நானும் அங்கு இருந்திருந்தால் நன்றாக இருக்கும்!’
இன்னொரு அறிவிப்பில் இவ்வாறுள்ளது: நபிகள் நாயகம்(ﷺ) அவர்கள் மரத்தின் அடியில் செல்வதற்கு முன்பே நஸ்துரா கவனித்துக் கொண்டிருந்தார். மேகத்தின் அசைவை அவர் குறிப்பாக கவனித்தார். நபிﷺ அவர்கள் மரத்தடியில் ஓய்வெடுக்க வந்தபோது, ​​அவர்களுக்கு ஆர்வம் அதிகமானது. பின்னர் மைசாரிடம் இருந்து விஷயத்தை அறிந்து கொண்டார். பாதிரியார் தனது ஆசிரமத்தை விட்டு வெளியே வந்து நபிﷺ அவர்களை அணுகினார். அவர் மரியாதையுடன் நபிﷺ அவர்களின் தலை மற்றும் பாதங்களில் முத்தமிட்டார். பிறகு, “நான் உங்களை நம்புகிறேன். தவ்ராதில் கூறப்பட்டுள்ள உண்மை நபிﷺ நீங்கள்தான் என்பதை நான் அறிவேன்” என்றார்.
பின்னர் அவர் கூறினார், “ஓ என் அன்பிற்குரியவரே , இறுதி நபியின் குணாதிசயங்களில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்தையும் நான் உணர்ந்தேன், தயவுசெய்து எனக்கு உங்கள் தோளைக் காட்டுங்கள். நபிகள் நாயகம் ﷺ அவருக்கு தோள்பட்டை காட்டினார். அவர் நபித்துவத்தின் முத்திரை பிரகாசமாக ஜொலிப்பதைக் கண்டார். அவர் முத்தமிட்டார். ஷஹாதத் கலிமா சொன்னார் பின்னர் அவர் கூறினார், ‘நீங்கள் மர்யமின் மகன் ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களால் முன்னறிவிக்கப்பட்ட நபி. ஒரு நாள் நீங்கள் இந்த மரத்தடியில் ஓய்வெடுக்க வருவீர்களென எங்களது முன்னோர்கள் கூறியிருந்தார்கள்.
இந்ந அதிசயங்களையெல்லாம் அனுபவித்தரிந்த மைசரா நபிﷺ அவர்களுடன் ஷாமில் வந்தார். வியாபாரம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக நடந்தது. வியாபாரத்தின் போது மற்றொரு குறிப்பிடத்தக்க சம்பவம் நடந்தது. பொருட்கள் தொடர்பாக வாடிக்கையாளர் ஒருவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அவர் ‘லாதா’ மற்றும் ‘உஸ்ஸா’ என்று சத்தியம் செய்து கூறினார், அதைக் கேட்டவுடன் நபிﷺ அவர்கள் பதிலளித்தார்கள்: “என் வாழ்நாளில் நான் ஒருமுறை கூட அவர்கள் மீது சத்தியம் செய்ததில்லை. என் நாட்டில், நான் அவர்களை (சிலைகளை) கண்டால், நான் ஒதுங்கி விடுவது வழக்கம். நபிﷺ அவர்களின் பேச்சில் ஏதோ சிறப்பிருக்கிறதென்று புரிந்து கொண்ட வாடிக்கையாளர் மைசராவை அணுகி, தனிப்பட்ட முறையில் கூறினார். மைசரா!’ அவர்தான் எங்களது வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இறுதி நபி, மைசரா..’
மைசரா எல்லாக் காட்சிகளையும் மனதில் பதித்துக்கொண்டான். அவர் நபிﷺ அவர்களுடன் கவனமாகப் பயணம் செய்தார். வழக்கத்தை விட இந்த சீசன் வெற்றிகரமாக இருந்தது. மைஸாரா நபிﷺ அவர்களிடம் கூறினார்கள். நாங்கள் அடிக்கடி கதீஜாவின் பொருட்களை வியாபாரம் செய்ய வந்துள்ளோம். இதுவரை இவ்வளவு சிறப்பாகவும் லாபகரமாகவும் இருந்ததில்லை.
மைஸாராவின் இதயம் நபிகள் நாயகத்தின் மீது அளவற்ற அன்பினால் நிறைந்திருந்தது. அவர் நபிﷺ அவர்களைத் தம் எஜமானரைப் போலப் பார்த்துக் கொண்டார். மக்காவுக்குத் திரும்பும் பயணக் குழுவைச் சுற்றி மேகம் நிழலிடுவதை அவர் சிறப்பாகக் கவனித்தார். நபிﷺ அவர்கள் முன்பக்கத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். குழுவின் பின்னால் மைசரா பயணித்தார். இடையில் மைசாராவின் இரண்டு ஒட்டகங்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு நடக்கவே முடியவில்லை. இறுதியாக, குழுவிற்கு முன்னால் பயணம் செய்த நபிﷺ அவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. நபிﷺ அவர்கள் அந்த ஒட்டகங்களை அணுகினார்கள். நாயகம்ﷺஅவர்கள் ஏதோ மந்திரத்தை ஓதி அவைகளை மெதுவாக தட்டினார். அதிசயமாக ஒட்டகங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் குழுவின் முன் சென்றன.

Mahabba Campaign Part-20/365

ஷாம் நாட்டிற்கு சென்ற வியாபார சங்கம் மக்காவிற்கு திரும்பினார்கள். பயணத்தில் நிகழ்ந்த அனைத்து அதிசய சம்பவங்களையும் மைசரா நினைவு கூர்ந்தார்.மேலும் அவை அனைத்தும் அவருடைய மனதில் ஆழ்ந்து பதிந்துள்ளது. ‘உஸ்ஃபான்’ பள்ளத்தாக்கைக் கடந்து ‘மர்ருல் லஹ்ரான்’ அதாவது ‘வாது பாத்திமா’ என்ற இடத்தை வியாபார சங்கத்தினர் அடைந்தனர். மைஸரா நபி(ﷺ) அவர்களை அணுகி இவ்வாறு கூறினார்.
கண்ணியம் மிகுந்தவரே… தாங்கள் கதீஜாவிடம் விரைந்து செல்லுங்கள்.பயண விவரங்களை அதிகாரப்பூர்வமாக அவர்களை தெரிவிக்கவும்.
கதீஜா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள். முந்தைய ஒப்பந்தத்தின்படி, நபி(ﷺ)அவர்களுக்கு இரண்டு ஒட்டகங்கள் வெகுமதியாகப் பெற வேண்டும். ஆனால் வாக்குறுதி அளித்ததை விட அதிகமாக நபிகள் நாயகம் (ﷺ) அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற மிகுந்த ஆசை மைசராவுக்கு இருந்தது.
நபி (ﷺ ) அவர்கள் அந்த ஆலோசனையை ஏற்றுக்கொண்டார்கள். கதீஜாவின் வீட்டை நோக்கிச் விரைந்தார் கள்.
நண்பகல் சமயம் கதீஜா தன் தோழர்களுடன் மொட்டை மாடியில் அமர்ந்திருந்தார்கள். தொலைவில் இருந்து கண்காணித்துக் கொண்டிருந்த கதீஜாவின் கண்களில் ஒரு சிவப்பு நிற ஒட்டகம் தென்பட்டது. அது நபி (ﷺ) அவர்களைச் சுமந்து வரும் ஒட்டகமாகும். மகிழ்ச்சியான முகத்துடன் மிக கம்பீரமாக நபிகள் நாயகம்ﷺஅவர்கள் வருகை தருகிறார்கள். அந்நேரம் கதீஜா ஒரு அதிசய சம்பவத்தை கவனித்தார். மேகம் குறிப்பாக ‘அல் அமீன்’ (ﷺ) அவர்கள் மீது நிழலிட்டவாறு நகர்கிறது. கதீஜா ஆர்வத்துடன் கவனித்தார்கள்.
நபி (ﷺ) அவர்கள் கதீஜாவின் வீட்டிற்குள் நுழைந்தார்கள். வியாபார சம்பந்தமாக பேசும் முன் பீவி கதீஜா அவர்கள் ஒரு விஷயத்தைத் உறுதிப்படுத்த விரும்பினார்கள். அது என்னவெனில் மேகத்தின் நிழல் மற்றும் அதன் பயணமும் ஆகும். அதற்கு அன்னையவர்கள் தந்திரப்பூர்வமாக மைசரா எங்கே? என்று நபி (ﷺ) அவர்களிடம் கேட்டார். “அருகில் உள்ள பள்ளத்தாக்கை அடைந்துவிட்டார்”. அவரை சீக்கிரம் வரச் சொல்ல முடியுமா?” என்று கதீஜா(ரலி) கேட்டார்கள். மேகத்தின் அசைவை உறுதிப்படுத்த பீவி பயன்படுத்திய யோசனைதான் அது. நபி (ﷺ) அவர்கள் ஒட்டகத்தின் மீது ஏறினார்கள். கதீஜா மீண்டும் தன் வீட்டு மாடிக்குச் சென்று அந்தக் காட்சியைப் பார்த்தார். விரைவில் நபி(ﷺ) அவர்களும், மைசராவும் திரும்பி வந்தனர்.கதீஜா அவர்கள் வியாபார விஷயத்தை விட அல் அமீன் (ﷺ) அவர்களின் பயணத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற அவசரத்தில் இருந்தார்கள். மிக ஆர்வத்துடன் மைசரா பேச ஆரம்பித்தார். நாயகத்திற்க்கு கிடைத்த அருட்கொடைகள், உன்னத குணங்கள், அற்புதங்கள் என வாய்விடாமல் பேசிக் கொண்டேயிருந்தார் மைஸரா.

கதீஜா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் தான் பார்த்த மேகத்தின் பயணத்தை விவரித்தார். ஆனால் அந்த காட்சி மைசராவிருக்கு பழகிவிட்டது. அந்த அதிசயத்தை மிக விளக்கமாக அவர் குறிப்பிட்டார்.அவர் நஸ்துராவையும் அவரது முன்னறிவிப்பையும் குறிப்பிட்டார்.இறுதியில் கதீஜா அம்மையார் வளமைக்கு மாறான அதிகமான வெகுமதிகளை அளித்து அனுப்பி வைத்தார். வழக்கத்திற்கு அதிகமாக நபி(ﷺ) அவர்களுக்கு நான்கு ஒட்டகங்களைக் கொடுத்தார்.

திஹாமாவில் உள்ள ‘ஹபாஷா’ சந்தைக்கு வர்த்தகப் பயணம் மேற்கொண்டதையும் வரலாறு குறிப்பிடுகிறது. (இந்த இடத்திற்கு ‘ஜுராஷ்’ என்ற பெயரும் பயன்படுத்தப்படுகிறது.
ஒவ்வொரு வர்த்தகப் பயணத்திற்கும் ஒரு பெண் ஒட்டகம் வெகுமதியாக வழங்கப்பட்டது.

நபி (ﷺ) அவர்கள் சம்பாதிகத்த செல்வங்கள் சொந்த தேவைகளுக்கு மட்டுமாக செல்வழிக்க ஒருபோதும் விரும்பவில்லை. அவர்களின் பெரிய தந்தைக்கும் குடும்பத்திற்கும் உதவியாக இருக்க வேண்டுமென்று நினைத்தார்கள். இதுமட்டுமின்றி அபூதாலிபிடமிருந்து நபிகள் நாயகம் (ﷺ) அவர்கள் பெற்ற அருட்கொடைகளைத் திருப்பிச் செலுத்துவதற்கு எல்லாம் வல்ல இறைவன் வழங்கிய ஓர் வாய்ப்பாகும். நபிகள் நாயகம் (ﷺ) அவர்களுக்கு எவரேனும் ஓர் உதவி செய்தால் அதைவிட மிகப்பெரும் உதவி திரும்பி செய்வது நாயகத்தின் பண்பாகும். நாயகத்தை பின்பற்றுபவர்கள் இன்றும் அவ்வழியை பேணி வாழ்கிறார்கள்.
ஆற்றல் மிக்க இளமையில் நபிகள் நாயகம் (ﷺ) அவர்கள் அழகின் தனித்துவமான வடிவமாக, தித்திக்கும் தங்கத் தாரைகையாக திகழ்ந்தார்கள். தற்சமயம் அண்ணலார் அவர்களுக்கு வயது இருபத்தைந்து ஆகும். பொதுவாக திருமணம் நடக்கும் வயது.
திருமண புதல்வனான வயதில் இருக்கும் ஒருவரின் அழகை நாம் நாளை தெரிந்து கொள்ளலாம். இன்ஷா அல்லாஹ்.

தொடரும்…

Mahabba Campaign Part-21/365

தாஹா நபி(ﷺ) அவர்களின் அழகு வர்ணிப்பதற்க்கும், எழுதுவதற்கும் சொல்வதற்க்கும் அப்பாற்பட்டது. உலகில் வேறு எந்த நபரின் அழகையும் இவ்வளவு உயர்வாக படிக்க முடியாது. வேறு எந்த நபரின் அழகைப் பற்றியும் இந்தளவுக்கு வரலாற்றில் குறிப்பிடவில்லை.
இன்றும் லட்சக்கணக்கான மாணவர்கள் நபிகள் நாயகம் (ﷺ) அவர்களின் அழகைப் பற்றிப் படிக்கிறார்கள், மேலும் கல்விப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக மிகுந்த முக்கியத்துவத்துடன் ஆய்வு செய்கிறார்கள். நபிகள் நாயகம் (ﷺ) அவர்களின் உடல் அழகு, நாயகத்தை பார்த்தவர்களிடமிருந்தும், அவர்களுடன் பழகியவர்களிடமிருந்தும் ஒரு அறுபடாத சங்கிலித் தொடராக அறிமுகப்படுத்தப்படுகிறது. அவர்கள் உடல் ரீதியாக இவ்வுளகிலிருந்து விடைப்பெற்று பதினைந்து நூற்றாண்டு கடந்த பிறகும், அண்ணலின் அழகான தோற்றத்தைப் பற்றியும் உடல் அமைப்பைப் பற்றியும் ஆர்வமாக படிக்கப்படுகிறுது. அவர்களது ஒளிமயமான அழகு ஒரு சிலையோ அல்லது புகைப்படமோ இல்லாமல் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் ஒளிர்கிறது.
அப்படிப்பட்ட ஆளுமையின் அழகை எப்படி வார்த்தைகளால் வர்ணிப்பது..?! அண்ணலாரின் அழகை நான் எழுதி பூர்த்தி செய்து விட்டேனென்று ‘ எந்த எழுத்தாளரும் சொல்ல மாட்டார், சொல்லவும் முடியாது. எனவே ஆதாரப்பூர்வமான நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு சில குறிப்புகளை மட்டும் இங்கே பார்க்கலாம்.

ஆதி நபி(ﷺ)அவர்கள் அகம் மற்றும் புறம் அழகின் பெட்டகமாக திகழ்ந்தார்கள்.
அழகும் கம்பீரமும் ஒன்று சேர்ந்த முகத்தோற்றம். அது நாயகத்திற்க்கு மட்டுமே தனித்துவமாக இருந்தது. அண்ணலின் புனித உடலில் ஏதோ ஒன்று அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருப்பதாகச் சொல்ல ஒன்றுமில்லை, சிவப்பு வெள்ளை நிறம், மேலும் தங்கம்போல் மிளிரும் மேணி. நாயகத்தின் புனித உடலில் முடிகளிலில்லாத அனைத்து பாகங்களிலிருந்தும் ஒளி வெளிப்படும். அன்னவர்கள் ஒரிடத்தில் அமர்ந்தால் அது சுற்றுப்புறத்தை ஒளிரச் செய்யும். பெருமானார்(ﷺ) அதிக உயரமுடையவராகவும் இருக்கவில்லை, குட்டையானவராகவும் இருக்கவில்லை. நடுத்தர உயரமுடையவராகவே இருந்தார்கள், ஆனால் ஒரு குழுவில் அமர்ந்தாலோ, ஒரு குழுவாக நடந்தாலோ, மற்றவர்கள் அனைவரும் நபி (ﷺ) அவர்களை விட உயரம் குறைவாக இருப்பதாக காட்சியளிக்கும்.
உடல் கொழுத்தவரென்றோ மெலிந்தவரென்றோ குறிப்பிட முடியாது. நடுத்தரமான உடல் அமைப்பு. நாயகத்தின் வயதோ, காலநிலையோ உடலின் அழகைக் குறைக்கவேயில்லை. எப்போதும் பூரண அழகுடன் இருந்தார்கள்.

முழு நிலாவுக்கு ஒப்பான முகத் தோற்றம். நபிகள் நாயகம் (ﷺ ) அவர்களை விவரித்தவர்கள் அனைவரும் ‘பூர்ணச் சந்திரன்’ போன்றவர்கள் என வர்ணித்தார்கள். ஏனென்றால், அவரது முகத்தின் நிறத்தையும் வெளிப்பாட்டையும் அறிமுகப்படுத்த வேறு உதாரணம் இல்லை. ஜொலிக்கும் நெற்றி. ஒளி வீசும் கன்னங்கள்.’

ஹழ்ரத் ஜாபிர் இப்னு ஸமூரா (ரலியல்லாஹூ அன்ஹூ) அன்னவர்கள் அறிவிக்கிறார்கள்:’சந்திரன் சூழ்ந்த இரவில் நான் கண்மணி நாயகம் (ﷺ) அன்னவர்களை சிவப்பு நிற ஆடையொன்று அணிந்தவாறு பார்த்தேன். பின்னர் சந்திரனையும் பார்த்தேன். அப்போது அன்னவர்கள் சந்திரனை விட அழகாக இருந்தார்கள்.(திர்மிதி)

ஹழ்ரத் அபூஹூரைரா (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்கள் அறிவிக்கிறார்கள்:நபிகள் நாயகம் (ﷺ) அன்னவர்களை விட மிக அழகான எந்த வஸ்துவையும் நான் கண்டதில்லை. அவர்களின் முகத்தில் சூரியன் ஓடிக்கொண்டிருப்பது போன்று இருப்பார்கள். (திர்மிதி)

‘பராஹ்’ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம், “பூமான் நபி(ﷺ)யின் முகம் வாளின் ஒளி போன்றதா” என்று கேட்டதற்கு “இல்லை, பூரணச் சந்திரனைப் போன்றவர்கள்” எனப் பதில் அளித்தார்கள். (புகாரி)

அதாவது முழுவட்ட வடிவ முகமுமல்ல, நேரான கத்தி முகமுமல்ல. ஒரு சரியான நீளம் மற்றும் வட்ட வடிவம். கண்கள் கூசும் மதிய நேரத்து சூரியனைப் போலல்ல. அதிகாலை சூரியனைப் போல் இலங்குவார்கள்.

அண்ணலாரின் எண்ணங்களையும் உணர்வுகளையும் அவர்களது முகத்திலிருந்து படிக்க முடியும். கோபமாக இருக்கும்போது முகம் சிவந்து விடும். மகிழ்ச்சியால் நிரம்பினால், அது பிரகாசமாக காட்சியளிக்கும்.

தூரத்திலிருந்து பார்க்கும்பொழுது கம்பீரமுடையவர்களாகவும் கண்ணியமுடையவர்களாகவும் காட்சியளிப்பார்கள். அருகிலிருந்து பார்க்கும்பொழுது கருணையின் கடலாக திகழ்வார்கள். காமில் நபிﷺ அவர்களிடம் பழகும்பொழுது அவர்கள் மீது நாம் வைத்திருக்கும் காதல் அதிகரிக்கும்.

நாயகம்ﷺஅவர்கள் ஸஹாபாக்களுக்கு கட்டளையிடும்பொழுது அவர்களுடைய முகத் தோற்றம் கம்பீரமாக தெரியும். அவர்களுக்கு கற்பிக்கும் பொழுது மென்மையாக இருக்கும், பூமான் நபிﷺ பழகும்பொழுது புன்னகைத்த பூ முகமுடையவர்களாக இருப்பார்கள். அல்லாஹு தஅலாவைப் பற்றி பேசும்பொழுது புகழுக்குறிய எம்மான் அவர்கள் பணிவுடன் பேசுவார்கள். இவையெல்லாம் நிறைந்த பரிபூரண சந்திரனாக சீமான் நபிﷺ அவர்கள் திகழ்வார்கள்.

Mahabba Campaign Part-22/365

சுர்மா இடா விட்டாலும் சுர்மா இட்டது போன்ற அகன்ற கண்களைக் கொண்டிருந்தார்கள் தாஹா நபி ﷺஅவர்கள். கண்களின் வெண்மைப் பகுதிக்கு பிரகாசமான சிவப்பு கலந்ததோர் கவர்ச்சி. கண்ணின் மணிகள் அழகிய கறுப்பானவை. மெல்லிய நீண்ட கறுத்த இமைகள். கண்களின் ஓரங்களில் மெல்லிய சிவப்பு நிறம். முடிகள் நிறைந்த புருவம். தூரத்தில் இருந்து பார்த்தால் புருவங்களுகு்கு இடையே இடைவெளி இல்லாததுபோலத் தோன்றும். ஆனால் சிறிய பிரகாசமான இடைவெளி உண்டு,

கோபம் வந்தால் புருவங்களுக்கிடையில் உள்ள நரம்பு வெளிப்படும். அப்போது புருவுங்களுக்கு இடையிலான இடைவெளி தூரத்தில் இருப்பவர்களுக்கும் தெரியும். அவர்களது பார்வை பெரும்பாலும் கண்காணிப்பாக இருக்கும். கீழ் நோக்கிப் பணிவுடன் நடப்பார்கள். விரும்பமில்லாத ஒன்றை கவனிக்க நேர்ந்தால் வெட்கத்துடன் கண்களை மூடிக் கொள்வார்கள். சில சந்தர்ப்பங்களில் ஆகாய அதிசயங்களைக் குறித்த சிந்தனையில் நீண்ட நேரம் வானத்தைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

பரந்த நெற்றி. ஒரு சபையில் அமர்ந்தால் ஒரு சிறப்பு ஒளி அவ்விடத்தைச் சூழும். சில நேரங்களில் அது ஒரு விளக்குபோலப் பிரகாசிக்கும். சதை தொங்கியோ அல்லது எலும்புகளை எடுத்துக் காட்டும் விதத்தில் மெலிந்தோ இல்லாத மென்மையான கன்னங்கள். கன்னத்தின் அழகை மட்டும் எடுத்துரைக்கும் குறிப்புகள் நூற்களில் உள்ளன.

தொழுகை முடிந்து ஸலாம் சொல்லும்போது பின்னால் இருப்பவர்கள் குறிப்பாக கன்னத்தைக் கவனிப்பார்கள். கன்னங்களை மட்டும் கூர்ந்து கவனித்தால் உடல் முழுவதுமான அழகுக்கு அது அடையாளமாக இருந்தது. உடலின் எந்தப் பகுதியிலும் சுருக்கமோ, மடிப்புகளோ இருக்கவில்லை.

தூரத்தில் இருந்து பார்த்தால் நீண்ட மூக்குபோல் தோன்றும். உண்மையில் மூக்கின் நுனி மெல்லியதாகவும், பிரகாசமானதாகவும் இருந்தது. மூக்கின் நடுவில் ஒரு சிறிய எழுச்சியும் ஒளியையும் கம்பீரத்தையும் தருவதாக இருந்தது.

அவர்களின் வாய் குறுகியதாக இருக்கவில்லை. அகலமாக இருந்தது. வாயின் அமைப்பும், தோரணையும் பேச்சின் அழகையும், தெளிவையும் தீருமானிக்கிறது. நீண்ட உதடுகள். பூக்கள் நிறைந்த வெட்டி ஒழுடுங்கமைக்கப்பட்ட செடியை நினைவூட்டும் அழகு. உதடுகள் இணையும் பகுதி மெல்லியதாகவும், மென்மையானதாகவும் இருந்தன.

வெண்மையான பனித்துளிகள் போன்ற பற்கள். முத்துக்கள் சிதறும் புன்னகை. பற்களுக்கிடையில் இருந்து ஒளி வெளிப்படும். முன் பற்களுக்கிடையில் இருந்த சிறிய இடைவெளியிலிருந்து சில நேரங்களில் வெளிச்சம் பரவும். சுவரில் ஒளி பிரதிபலிப்பதைப் பார்க்கும் தோழர்கள் அது பற்களிலிருந்து வருகிறது என்று உணர்ந்துக் கொள்வர்.

அவர்களுடைய மவுனத்துக்கும் ஒரு வசீகரம் இருந்தது. என்ன அழகான குரல்! ஒவ்வொரு எழுத்தையும், வாக்கியத்தையும் தெளிவுபடுத்தும் பேச்சு. மிகக் குறைந்த வார்த்தைகளில் ஏராளமான கருத்துக்கள் இருக்கும். இதனை அரபியில் “ஜவாமிஉல் கலிம்” என்று கூறுவர்.

சபையில் இருப்பவர்கள் அவர்களது உரையின் ஒரு எழுத்தைக்கூட தவறவிடாமல் கேட்பர். ஒருவன் தன் தலையில் இருக்கும் பறவை பறந்துவிடக் கூடாது என்பதில் எத்துணை கவனமாக இருப்பாரோ அதுபோல தோழர்கள் கவனமாக நபி ஸல்லல்லாஹு இலைஹி வஸல்லம் அவர்களின் உரைகளை செவியேற்பர். இந்த உதாரணம் ஹதீஸுகளில் கூறப்பட்டுள்ளது.

அதிகமாக அவர்கள் பேசுவதில்லை. அத்தகைய உரையாடல்களில் அவர்கள் ஆர்வம் காட்டுவதுமில்லை. ஒரு கெட்ட வார்த்தைகூட அவர்கள் பேசியதில்லை. மக்களின் அந்தரங்கம் அல்லது ஏதாவது பேச வேண்டுமென்றால் சாடையாகத்தான் சொல்வார்கள். யாரையும் குற்றம் சொன்னதில்லை. சாப வார்த்தையோ, அவதூறான வார்த்தையோ பயன்படுத்தியதில்லை.

பரந்த தோள்கள் மற்றும் பிடரி. தோள்களுக்கிடையில் அகலம் இருந்தது. அதாவது பரந்த மார்பு. கழுத்தும், பிடரியும் வெள்ளி போன்ற பளபளப்பைக் கொண்டிருந்தன. ஒரு சிலை எத்துணை மினுமினுப்பாக இருக்குமோ அதைவிட அதிக மினுமினுப்பு கொண்டவை என ஹதீஸுகளில் காணலாம்.

சாதாரணமாகக் கழுத்தில் காணப்படும் சுருக்கங்களோ, மடிப்புகளோ அவர்களுக்கு இல்லை. சட்டை அணியாதபோதும், தலைமுடி பிடரி வரை எட்டாதபோதும் கழுத்தைத் தெளிவாகக் காணலாம். அந்த அழகு யாரையும் ஈர்க்கும். மார்பு மற்றும் வயிற்றின உயரம் ஒரே மாதிரியாக இருந்தது. வயிறு கொஞ்சம்கூட வெளியே தள்ளி இருக்கவில்லை. கீழ் மடிப்பு இடுப்பு ஆடைக்குக் கீழ் இருந்தது.

Mahabba Campaign Part-23/365

நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அறிவுத் திறனை ஒளிரச் செய்யும் தோரணை கொண்ட பரந்த சிரசைப் பெற்றிருந்தார்கள். அவர்களுடைய தலைமுடி சடை பிடித்ததாகவோ, காற்றில் பறப்பதாகவோ இல்லாமல் படிந்திருந்தது. சில நேரங்களில் தோள் வரையும், வேறு சில நேரங்களில் காதுகள் வரையும் தலை முடி நீண்டிருக்கும். இரண்டு பகுதிகளாக பிரித்து சீவ வேண்டுமென்றால் வகிடு எடுத்து சீவுவார்கள். சில சமயங்களில் தளர்வாக இடுவார்கள். சில நேரங்களில் பின்னி இடுவார்கள். எண்ணெய் தடவாவிட்டாலும் எண்ணெய் தடவியதுபோல அழகாக இருக்கும்.

அண்ணலவர்கள் நீண்ட அடர்ந்த தாடியைப் பெற்றிருந்தார்கள். மேலும் நேர்த்தியாக வெட்டி ஒழுங்கமைக்கப்பட்ட கீழ்த் தாடியும் உண்டு. யோசனையில் மூழ்கும்போது தாடியை வருடிக் கொண்டிருப்பார்கள். உழூ செய்யும்போது தாடி முடிகளுக்கு இடையே விரல் நுழைத்து கழுகுவார்கள்.

நகங்கள் மற்றும் முடிகளை குறிப்பிட்ட இடைவெளியில் வெட்டி சுத்தம் செய்வார்கள். பொதுவாக நாற்பது நாட்களுக்குள் உரோமங்கள் வெட்டி சுத்தம் செய்வதும், வாரந்தோறும் நகங்கள் வெட்டுவதும் வழக்கம். நகங்கள் வெட்டும்போது வலது கையின் ஆட்காட்டி விரலில் ஆரம்பித்து கட்டை விரலில் முடிப்பார்கள். இடது கையின் சுண்டு விரலிலிருந்து தொடங்கி கட்டை விரலில் முடிப்பார்கள். தலை முடியை சீவி சுத்தம் செய்வார்கள், ஒருநாள் விட்டு ஒரு நாள் எண்ணெய் தடவுவார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உடலில் அதிக ரோமங்கள் இருக்கவில்லை. மணிக்கட்டு, நெஞ்சின் மேற்பகுதி மற்றும் பிடரியில் ரோமம் இருந்தது. நெஞ்சிலிருந்து தொப்புள் வரை ஒரு கோடுபோல முடி இருந்தது. இது தவிர மார்பிலோ, வயிற்றிலோ வேறு முடிகள் இருக்கவில்லை. ரோமம் இருந்தாலும், இல்லை என்றாலும் அக்குள் வெளிச்சம் நிறைந்த வெண்மையான பொலிவுடன் இருந்தது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உறுதியான கை மற்றும் கால்கள், ஆரோக்கியமான தசைகள். வலுவான எலும்புகள். திடமான, திறன் கொண்ட உறுப்புகள். அகலமான, வலுவான கை, கால் முட்டுகள், பட்டுபோன்ற மென்மையான, பரந்த உள்ளங்கைகள் ஆகியவற்றைப் பெற்றிருந்தார்கள். “நாங்கள் தொட்ட பட்டுகளைவிட அவர்களது கரங்கள் மிருதுவானவை, மென்மையானவை” என தோழர்கள் பிற்காலத்தில் கூறினர்.

அவர்களுடைய பாதங்கள் உறுதியானவை. பாதங்கள் மீது தண்ணீர் ஊற்றினால் தங்கி நிற்கும் வகையிலான மடிப்புகளோ, சுருக்கங்களோ இருக்கவில்லை. பாத மடிப்புகள் மெலிந்தவை. கால் விரல்கள் நீளமானவை. குறிப்பாக சுண்டு விரல் மற்ற விரல்களைவிட நீளமாக இருந்தது. கணுக்கால்கள் கஸ்தூரியைவிட நறுமணம் பெற்றிருந்தது. நடக்கும்போது முன்னோக்கி சாய்ந்து உயரத்தில் இருந்து கீழே இறங்கி வருவதுபோல ஒவ்வொரு அடியும் விறுவிறுப்பாக வைத்து நடப்பார்கள். அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா கூறினார்கள் “நபி அவர்கள் ஒவ்வொரு காலடியையும் எடுத்தெடுத்து வைத்து நடப்பார்கள்.”

உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்த பயில்வானையும் வெல்லும் வலிமை பெற்றிருந்தார்கள். மல்யுத்தப் போட்டிக்கு சவால் விட்ட அரபு நாடுகளில் பிரபலமான பயில்வான் ருகானாவை மல்யுத்தத்தில் வென்றார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அழகைப் பற்றி ஹஸ்ஸான் ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள் “நபி அவர்களுடைய பேரெழில் அவர்கள் விரும்பியதைப் போல அல்லாஹ் அவர்களைப் படைத்தது போன்றுள்ளது!”

நபி யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அழகில் கவரப்பட்ட அக்காலப் பெண்கள் தாங்கள் வைத்திருந்த ஆப்பிளுக்கு பதிலாக தமது கை விரல்களை வெட்டினர். அப்பெண்கள் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் எழிலைப் பார்த்திருந்தால் விரலுக்கு பதிலாக தமது இதயங்களை வெட்டியிருப்பார்கள்.

ஒரு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கறுப்புத் தலைப்பாகை அணிந்து வந்தார்கள். அதைக் கண்ட மனைவி அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா கேட்டார்கள் “நபியே! தங்களின் வெண்மை இந்தக் கருமையின் அழகைக் கூட்டுகிறதா? அல்லது தலைப்பாகையின் கருமை தங்களின் வெண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறதா?

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முழுமையான பேரழகுடன் திகழ்ந்தார்கள். அந்தப் பேரழகு மொழிக்கும், கற்பனைக்கும் அப்பாற்பட்டது. அதை எடுத்துரைத்திட நான் எவ்வளவோ முயன்றாலும் முடியாது. சரணடைவதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை.

Mahabba Campaign Part-24/365

சென்ற சில தினங்களில் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேரெழிலைப் பற்றி நாம் படித்தோம்…….

இனி அப்பெருமகனாரின் வரலாற்றுப் பக்கங்களில் நாம் திரும்பி வருவோம்……

எந்த ஒருவரும் தமது மகளுக்குக் கணவராகத் தேர்ந்தெடுக்கத் தகுந்த அனைத்து நற்குணங்களும் நிறைவாகப் பெற்றிருந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், எந்தப் பெண்ணும் ஆசைப்பட்டு காதலிக்கக் கூடிய வசீகரத்தின் உருவகமாகத் திகழ்ந்தார்கள். அவர்கள் உலக அழகிகளைத் தேடக்கூடிய அழகின் மொத்த உருவாகவும் திகழ்ந்தார்கள்.

சில பணிகளுக்காக அரண்மனைகள் தயாராகிக் கொண்டிருந்தன. அது வெறுமொரு திருமணச் சர்ச்சை அல்ல! ஒரு ஆணுக்கு ஒரு பெண் வேண்டுமல்லவா! என்ற அர்த்தத்திலும் அல்ல! மக்கா நகரம் மட்டுமல்ல! மொத்த உலகின் மாற்றத்திற்கான வழி வகுக்கும் திருமணச் சர்ச்சை!

கதீஜா அம்மையார் தனது நம்பிக்கைக்குரிய நஃபீஸா பின்த் முன்யா என்பவரிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் திருமணம் கொள்ளும் தமது விருப்பத்தை தொரிவித்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் விருப்பத்தைத் தெரிந்து வரக் கூறினார்.

நஃபீஸா கூறுகிறார் “நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இரகசியமாகச் சந்தித்து “நீங்கள் ஏன் திருமணம் செய்துக் கொள்ளவில்லை? அதைப் பற்றி ஏன் சிந்திக்கவில்லை? அதற்குத் தடையாக இருப்பது யாது?” என்று கேட்டேன்.

“நான் திருமணத்திற்கான பணத்தை சேமித்து வைக்கவில்லை” என்று அவர்கள் கூறினார்கள். “நிதி ஒரு பிரச்சனையல்ல! உன்னத குடும்பத்தைச் சார்ந்த அழகிய ஒரு பணக்காரப் பெண்மணிடமிருந்து வேண்டுகோள் வந்தால் ஒப்புக் கொள்வீர்களா?” என்று கேட்டேன். “யாரைக் கூறுகிறீர்கள்? என்று கேட்டார்கள். ஒரே வார்த்தையில் “கதீஜா என்றேன். “அது எப்படி நடக்கும்?” என்று நபி அவர்கள் கேட்டார்24

சென்ற சில தினங்களில் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேரெழிலைப் பற்றி நாம் படித்தோம்…….

இனி அப்பெருமகனாரின் வரலாற்றுப் பக்கங்களில் நாம் திரும்பி வருவோம்……

எந்த ஒருவரும் தமது மகளுக்குக் கணவராகத் தேர்ந்தெடுக்கத் தகுந்த அனைத்து நற்குணங்களும் நிறைவாகப் பெற்றிருந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், எந்தப் பெண்ணும் ஆசைப்பட்டு காதலிக்கக் கூடிய வசீகரத்தின் உருவகமாகத் திகழ்ந்தார்கள். அவர்கள் உலக அழகிகளைத் தேடக்கூடிய அழகின் மொத்த உருவாகவும் திகழ்ந்தார்கள்.

சில பணிகளுக்காக அரண்மனைகள் தயாராகிக் கொண்டிருந்தன. அது வெறுமொரு திருமணச் சர்ச்சை அல்ல! ஒரு ஆணுக்கு ஒரு பெண் வேண்டுமல்லவா! என்ற அர்த்தத்திலும் அல்ல! மக்கா நகரம் மட்டுமல்ல! மொத்த உலகின் மாற்றத்திற்கான வழி வகுக்கும் திருமணச் சர்ச்சை!

கதீஜா அம்மையார் தனது நம்பிக்கைக்குரிய நஃபீஸா பின்த் முன்யா என்பவரிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் திருமணம் கொள்ளும் தமது விருப்பத்தை தொரிவித்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் விருப்பத்தைத் தெரிந்து வரக் கூறினார்.

நஃபீஸா கூறுகிறார் “நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இரகசியமாகச் சந்தித்து “நீங்கள் ஏன் திருமணம் செய்துக் கொள்ளவில்லை? அதைப் பற்றி ஏன் சிந்திக்கவில்லை? அதற்குத் தடையாக இருப்பது யாது?” என்று கேட்டேன்.

“நான் திருமணத்திற்கான பணத்தை சேமித்து வைக்கவில்லை” என்று அவர்கள் கூறினார்கள். “நிதி ஒரு பிரச்சனையல்ல! உன்னத குடும்பத்தைச் சார்ந்த அழகிய ஒரு பணக்காரப் பெண்மணிடமிருந்து வேண்டுகோள் வந்தால் ஒப்புக் கொள்வீர்களா?” என்று கேட்டேன். “யாரைக் கூறுகிறீர்கள்? என்று கேட்டார்கள். ஒரே வார்த்தையில் “கதீஜா என்றேன். “அது எப்படி நடக்கும்?” என்று நபி அவர்கள் கேட்டார்கள். “அது என் பொறுப்பு, தேவையானதை நான் செய்துக் கொள்கின்றேன்” என்றேன்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வேண்டுகோளை நிராகரிக்கவில்லை என்பதை கதீஜா அம்மையாரிடம் நஃபீஸா தெரிவித்தார். தொடர்ந்து கதீஜா அம்மையார் அதிகாரப்பூர்வமாக தனது தூதரை நபி அவர்களிடம் அனுப்பி வைத்து, அபூதாலிபிடம் தெரிவிக்கச் செய்தார்.

மற்றொரு அறிவிப்பு பின்வருமாறு :
நஃபீஸா வழியாக செய்தியறிந்த கதீஜா அம்மையார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நேரடியாக “தாங்கள் திருமணம் செய்துக் கொள்ள விரும்பவில்லையா?” என்று கேட்க, நபி அவர்கள் “யாரைத் திருமணம் செய்துக் கொள்வது?” எனத் திருப்பிக் கேட்டார்கள். “என்னை!” என்றார்கள் அம்மையார் அவர்கள். “அது எப்படி நடக்கும்?” என்று நபி யவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். “நீங்கள் குறைஷிகளின் உயர்தர விதவை. நான் குறைஷிக் குடும்பத்தைச் சேர்ந்த அனாதை!” என்றார்கள். “அது பிரச்சனை அல்ல! தங்களின் சம்மதத்தை என்னிடம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தால் எனக்டகு சம்மதம்” என்று சொன்னார்கள் கதீஜா அம்மையார்.

இன்னொரு அறிவிப்பில் : கதீஜா அம்மையார் “இப்ன அம்மீ! தங்களுடைய குடும்ப மகிமை, பண்பின் மகத்துவம், நேர்மை, சமூகத்தின் அங்கீகாரம் ஆகியவையே இப்படியொரு ஆசைக்குக்கு காரணம்” என்று கூறினார்கள் எனக் காணலாம்.

“நாளைக்கே தங்கள் உறவினர்களை என் வீட்டுக்கு அனுப்புவீர்களா?” என்று கதீஜா அம்மையார் கேட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூதாலிபிடம் தெரிவித்தார்கள்.

அபூதாலிப் மறுநாள் கதீஜா அம்மையார் வீட்டுக்குச் சென்றார். அவரை சகல மரியாதைகளுடனும் வரவேற்ற அம்மையார் அவர்கள் “தாங்கள் என்னுடைய சகோதரரிடம் பேசுங்கள். தங்களுடைய சகோதரர புத்திரரை எனக்குத் திருமணம் செய்து வைத்திடக் கூறுங்கள்” என்று கேட்டுக் கொண்டார். “கதீஜா என்ன சொல்கிறீர்கள்?, விளையாட்டுக்குச் சொல்கிறீர்களா?” என்று அபூதாலிப் வினவ, “இல்லை! உண்மையாகத்தான் சொல்கின்றேன். அல்லாஹ்வின் ஏற்பாடுகள் இப்படித்தான் இருக்கும்!” என்று பதிலுரைக்க திருமண ஏற்பாடுகளைச் செய்தார் அபூதாலிப்.

நிச்சயதார்த்தம் முடிந்தது. அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வயது இருபத்தைந்து, இரண்டு மாதங்கள், பதினைந்து நாட்கள். கதீஜா அம்மையாருக்கு வயது நாற்பது.

திருமணம் தொடர்ப்பான விஷயங்களில் நுழைவதற்கு முன் மணமனளைப் பற்றி மேலும் தெரிந்துக் கொள்வோம்.

குறைஷிக் குலத்தின் ஒரு பிரிவு அஸத் கோத்திரம். இவர்கள் மேல்தட்டு வர்க்கத்தினர் ஆவார்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஐந்தாவது பாட்டனார் குஸைய். இவரது மகன் அப்துல் உஸ்ஸாவின் மகன் அஸதின் மகனான குவைலித் கதீஜா அம்மையாரின் தந்தை ஆவார். குவைலித் அப்துல் முத்தலிபின் உற்ற தோழராகவும் இருந்தார். அப்துல் முத்தலிப் அப்போதைய எமன் நாட்டு அரசர் ஸைஃப் பின் தீயஸன் என்பவரைப் பாராட்டச் சென்றபோது குவைலிதும் உடன் சென்றார்.

கதீஜா அம்மையாரின் தாயார் பாத்திமா, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஒன்பதாவது பாட்டனார் லுவா என்பவரின் பரம்பரையில் வந்த ஸாயிதாவின் மகளான ஹாலாவின் மகளாவார். மேலும் ஹாலா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தந்தை வழிப் பாட்டனார் அப்துல் மனாஃபின் மகளுமாவார்.

கதீஜா அம்மையார் அவர்களின் குடும்பம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தந்தை வழியில் மூன்றாவது தலைமுறையைச் சென்றடைகிறார்.

ஆக, அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவிமார்களில் கதீஜா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மிக நெருக்கமான குடும்ப உறவைக் கொண்டவர்.

Mahabba Campaign Part-25/365

பீவி கதீஜா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் தமது தந்தை வழி பாட்டனார் அப்துல் உஸ்ஸா வீட்டில் பிறந்து வளர்ந்தார். அவரது வீடு கஃபாவின் முற்றத்தில், கஃபாவிலிருந்து வெறும் ஒன்பது முழம் தூரத்தில் இருந்தது. காலையில் கஃபாவின் நிழல் இந்த வீட்டின் மீதும், மாலையில் வீட்டின் நிழல் கஃபா மீதும் விழும். அப்போது கதீஜா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கஃபாவின் நிழலில் பிறந்து வளர்ந்தவர் ஆவார்.

கலீஃபா உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய காலத்திலும் அந்த வீடு இதே நிலையில்தான் இருந்தது. வீட்டு முற்றத்தில் இருந்த மரத்தின் கிளை கஃபாவை தவாஃப் செய்பவர்களுக்கு சிரமமாக இருந்ததால் கலீஃபா அவர்கள் அந்த மரத்தை வெட்டி விட்டு அதற்குப் பகரமாக ஒரு பசுவைக் கொடுத்தார்கள். கலீஃபா உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய ஆட்சியின் இறுதி காலத்தில் ஹஜ் யாத்ரீகர்களின் வசதிக்காக அந்த வீடு இடிக்கப்பட்டு, வீடிருந்த இடம் கஃபாவுடன் இணைக்கப்பட்டது.

பீவி கதீஜா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் வளர்ந்த பிறகு கஃபாவுக்குப் பக்கத்திலிருந்த மற்றொரு வீட்டுக்குக் குடி பெயர்ந்தார்கள். அஜ்யாத் எனுமிடத்தில் உள்ள “ஜபல் கல்ஆ” வீட்டில் வைத்து அவர்களுடைய முதல் திருமணம் நடந்தது. இன்று இப்பகுதி இடிக்கப்பட்டு விட்டது.

நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் நடைபெற்ற திருமணத்தின்போது “மர்வா” வுக்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் அன்னையவர்கள் வசித்து வந்தார்கள்.

கதீஜா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் முதலில் ஸுராத் பின் நப்பாஷின் மகன் ஹிந்த் என்பவரை மணந்தார்கள். இவர் அபூஹாலா என்று அழைக்கப்பட்டார். இவர் தமீம் கோத்திரத்தின் பிரபலமான நபராக இருந்தார். இத்திருமணத்தில் ஹிந்த், ஹாலா என்ற இரு ஆண் பிள்ளைகள் பிறந்தனர். அபூஹாலா இளம் வயதிலேயே மரணத்தைத் தழுவினார்.

கதீஜா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அதிக காலம் விதவையாக இருக்கவில்லை. மக்ஸூமி கோத்திரத்தைச் சார்ந்த ஆபிதின் மகன் அதீக் என்பவருடன் இரண்டாவது திருமணம் நடந்தது. இத்திருமணமும் அதிக காலம் நீடிக்கவில்லை. இவர் மூலம் ஹிந்த் என்ற மகளை அன்னை அவர்கள் பெற்றெடுத்தார்கள்.

கதீஜா அம்மையார் அவர்கள் முதலில் ஹிந்தைத் திருமணம் செய்தார்களா? அல்லது அதீகைத் திருமணம் செய்தார்களா? என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன.

இரண்டு தடவைகள் விதவையாகி, மூன்று குழந்தைகளுக்குத் தாயாருமான கதீஜா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் உடனடியாக வேறொரு திருமணத்தைக் குறித்து ஆலோசிக்கவில்லை. அன்னையவர்களின் அழகு, செல்வம், நற்குணத்தால் கவரப்பட்ட மக்காவின் பிரபுக்கள், செல்வந்தர்கள் அம்மையார் அவர்களைத் திருமணம் செய்திட ஆர்வப்பட்டனர். ஆனால் அம்மையார் அவர்கள் யாருக்கும் உடன்படவில்லை. யாருக்காகவோ எதிர்பார்த்து காத்திருப்பதுபோல யாருக்கும் சம்மதம் தரவுமில்லை.

ஜாஹிலிய்யா காலத்திலும் தூய வாழ்க்கை வாழ்ந்த சில அபூர்வ மனிதர்களில் அம்மையார் அவர்களும் ஒருவர். அன்றைய அனாச்சாரச் செயல்கள் எதிலும் அவர்கள் ஈடுபட்டதில்லை. அதனாலேயே தாஹிரா — பரிசுத்தமானவர் என்று அழைக்கப்பட்டார்கள்.

புத்திசாலியான கதீஜா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் தமது செல்வத்தை வணிகத்தில் முதலீடு செய்தார்கள். படிப்படியாக அவர்கள் மக்காவின் முக்கிய வணிகர்களில் ஒருவராக மாறினார்கள். இதனால் ஸய்யிதத்து நிஸாஇ குரைஷ் — குறைஷிப் பெண்களின் தலைவி என்ற பட்டத்தைப் பெற்றார்கள்.

அன்னையவர்கள் தமது பிள்ளைகளை நன்றாகக் கவனித்து வளர்த்தார்கள். மகன், மகள், கணவர் ஆகிய மூவருக்கும் ஒரே பெயர் ஹிந்த் என்பது ஒரு அபூர்வ நிகழ்வாகும்.

முதற் கணவர் ஹிந்தின் மகன் ஹிந்த் தாயுடன் வசித்து வந்தார். அதன் காரணமாக பிற்காலத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டுதலைப் பெற்றார். ஆரம்ப காலத்திலேயே இஸ்லாமைத் தழுவினார். அண்ணல் நபியவர்களின் உடல் வர்ணனை மற்றும் குண நலன்களை எடுத்துரைப்பதில் ஹிந்த் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் முன்னிலை வகித்தார்கள். பிற்காலத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேரப்பிள்ளைகள்கூட நபியவர்களின் பேரெழில் வர்ணனைகள் கேட்க ஹிந்த் அவர்களை அணுகுவதுண்டு. ஜமல் யுத்ததில் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சார்பாக போரிட்டு ஷஹீதானார்கள்.

மகன் ஹாலா இஸ்லாமை ஏற்று மதீனாவுக்கு வந்ததாகத் தெரிகிறது. ஆனால் விரிவான வரலாற்றுக் குறிப்புகள் இல்லை.

மகள் ஹிந்துவும் அன்னையவர்களுடன் வசித்து வந்தார். அவர் தமது தந்தை வழியைச் சேர்ந்த ஸஃபிய்யி பின் உமையா என்பவரைத் திருமணம் செய்துக் கொண்டார். இவருக்கு முஹம்மத் என்ற மகன் பிறந்தார். இவருடைய பரம்பரையினர் பனூதாஹிரா அல்லது கதீஜாவின் குழந்தைகள் என மதீனாவில் அறியப்பட்டனர். அன்னையவர்களின் மீதி இரண்டு குழந்தைகள் பற்றி தெளிவான வரலாற்றுக் குறிப்புகள் இல்லை.

Mahabba Campaign Part-26/365

மணமகன் மற்றும் மணமகளின் பின்னணியை நாம் படித்தோம்.

உன்னத குடும்பத்தைச் சேர்ந்த, புத்தசாலியான, அழகு மிகுந்த, செல்வச் செழிப்பு மிக்க அன்னை கதீஜா நாயகி அவர்கள் இத்திருமணத்தில் ஆர்வம் காட்டுவதற்கான காரணம் என்ன?

வரலாறு சில செய்திகளைச் சொல்லித் தருகிறது.

நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கண்ணியம், தூய்மை, நற்பெயர் ஆகியவற்றுக்கு மேலாக சில ஆன்மீகச் செய்திகள் கிடைத்தவர் போல, அனுப்பப்படவுள்ள இறைத்தூதரின் அரண்மனைக்காக இறைவனால் படைக்கப்பட்டவர்போல தன்னை அன்னை அவர்கள் உணர்ந்தார்கள்.

இடையில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. குறைஷிகளின் ஒரு திருவிழா தினம். மக்காவின் பெண்கள் கஃபாவைச் சுற்றித் திரண்டனர். பெண்களுக்கென தனியிடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கே அன்னை கதீஜா நாயகி அவர்களும் இருந்தார்கள். எல்லாரும் கேளிக்கைகளில் மூழ்கி இருந்தனர்.

மக்காவுக்குப் பயணியாக வந்த வேதம் படித்த யூதர் ஒருவர் அங்கே வந்தார். பெண்கள் இருந்த பகுதிக்குச் சென்ற அவர் “குறைஷிப் பெண்களே! வெகுவிரைவில் ஒரு இறைத் தூதர் உங்களுக்கு மத்தியில் தோன்றுவார். அந்த மகாத்மாவின் படுக்கையை உங்களில் பகிர்ந்துக் கொள்ளும் அதிர்ஷ்டசாலி யார்? வேண்டுமானால் முயற்சி செய்து பாருங்கள்” என்று கூறினார். இதைக் கேட்டு பெண்கள் சிரித்தனர். சிலர் அவரைக் கேலி செய்தனர். ஆனால் அன்னை கதீஜா நாயகி அவர்கள் எதுவும் சொல்லாமல் யூதர் சொன்னதைக் குறித்து யோசித்துக் கொண்டிருந்தார்கள்.

சில நாட்களுக்குப் பின்னர் மைஸரா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அன்னை கதீஜா நாயகி அவர்களிடம் அறிமுகப்படுத்தியபோது அந்த யூத அறிஞரின் வார்த்தைகள் அன்னை அவர்களின் நினைவுக்கு வந்தது. ஷாம் பயணத்துக்குப் பிறகு கிடைத்த தகவல்கள் அவர்களது நம்பிக்கையை வலுப்படுத்தியது. அற்புதங்களை நேரடியாகவும் பார்த்தபோது இனி அதிகமாக யோசிக்க எதுவுமில்லை என்ற முடிவுக்கு வந்தார்கள்.

அன்னை கதீஜா நாயகி அவர்கள் நாற்பது வருடங்கள் கஃபாவின் முற்றத்தில், நிழலில் வளர்ந்து வாழ்ந்தவரல்லவா! எனவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்தையும் நேரடியாக அறிந்துக் கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தது. மக்காவில் கடும் வறட்சி ஏற்பட்டபோது அப்துல் முத்தலிப் குழந்தையாக இருந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கரங்களில் ஏந்திக் கொண்டு கஃபாவுக்குச் சென்று செய்த பிரார்த்தனை, அதன் பயனாய் பெய்த மழை போன்ற அனுபவங்களைப் பெற்றவர்கள் அன்னை அவர்கள்.

இமாம் குலா அவர்கள் பதிவு செய்துள்ள ஒரு செய்தியையும் இத்துடன் சேர்த்து வாசிக்க வேண்டும். மைஸரா தெரிவித்த அனுபவச் செய்திகளும், நேரில் கண்ட அற்புதங்களும் அன்னை கதீஜா நாயகி அவர்களை சிந்திக்க வைத்தன. எனவே உண்மை நிலமையை அறிந்திட வரகத் இப்னு நவ்ஃபலை அணுகினார்கள். வரகத் அன்னை அவர்களின் குடும்ப உறுப்பினர். வேதம் படித்த மகாபண்டிதர்.

அன்னை கதீஜா நாயகி அவர்கள் சொன்னவற்றை கவனமாகக் கேட்டு விட்டு, “கதீஜா! தாங்கள் சொன்னதெல்லாம் உண்மையாக இருந்தால் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாக்களிக்கப்பட்ட தீர்க்கதரிசி ஆவார். இப்படியொரு தீர்க்கதரிசி நியமிக்கப்படுவார் என்பதை நானறிவேன். அந்தத் தீர்க்கதரிசி வரும் காலம் நெருங்கி விட்டது.” என்றார். வரகத் அவர்கள் சொன்னதை அன்னை கதீஜா நாயகி அவர்கள் நன்கு மனதில் பதிவு செய்துக் கொண்டார்கள். ஒரு பாக்கியம் மிகுந்த நல்வாழ்க்கையை ஆசைப்பட்டார்கள்

அன்னை கதீஜா நாயகி அவர்களிடம் வாக்களிக்கப்பட்ட நபியின் விவரங்களை வரகத் பின்னரும் கூறிக் கொண்டே இருந்தார். அவற்றை கவிதைகளாக இயற்றி அன்னை அவர்களுக்கு அனுப்புவார். அக்கவிதைகள் வரலாற்றில் இடம் பெற்றுள்ளன.

மற்றொரு சுவாரசியமான தகவல் இருக்கிறது. அனஸ் பின் மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாக இமாம் ஃபாகிஹி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அறிவி்க்கின்றார்கள் “அன்னை கதீஜா நாயகி அவர்களிடமிருந்து வந்த திருமண வேண்டுகோளை அபூதாலிப் பெற்றதும் உடனடியாக ஒப்புக்கொண்டு, நேரடியாகப் பேசுவதற்கு ஊழியர் நப்ஆ அவர்களுடன் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அன்னையவர்களின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

நப்ஆ கூறுகிறார் “அன்னை கதீஜா அவர்களின் வீட்டை அடைந்தோம். அவர்கள் வாசலில் வந்து எங்களை அன்புடன் வரவேற்றார்கள். “என் பெற்றோர் தங்களுக்கு அர்ப்பணம். இந்த உறவைப் பற்றி நான் சிந்திக்கக் காரணம் இருக்கிறது. முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த சமூகத்தின் இறைத் தூதராக இருப்பார் என்று நம்புகின்றேன். அப்படியாயின் நபித்துவத்துக்கு பிறகும் என்னை அங்கீகரிப்பார்களில்லையா? அவர்களை நபியாக அனுப்பும் இறைவனிடம் எனக்காக பிரார்த்தனை செய்வார்களில்லையா!” என்று கூறினார்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் “அந்த நபர் நானாக இருந்தால் பரஸ்பரம் ஒருபோதும் முறியாத உடன்படிக்கைக்கு நாம் உடன்படுகின்றோம். தாங்கள் நம்பிக்கை வைத்த நபர் நான் இல்லையென்றால் நீங்கள் நம்பிக்கை கொண்டுள்ள இறைவன் உங்களை நிராசைக்குள்ளாக்க மாட்டான்.”

Mahabba Campaign Part-27/365

தொடர்ந்து நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் குறித்து பார்ப்போம்.

எத்தனையோ அழகிய மங்கையர்கள் கிடைக்கும்போது அன்னை கதீஜா நாயகி ரழியல்லாஹு அன்ஹா அவர்களை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏன் தேர்ந்தெடுத்தார்கள்?

இக்கேள்விக்கான முக்கியமான, முதன்மையான பதில் : அது அல்லாஹ்வின் தேர்வு என்பதாகும். அண்ணல் நபி அவர்களின் குழந்தைப் பருவம் மற்றும் இளமைப் பருவம் அனைத்தும் சிறப்பான ஆன்மீக ஒழுக்கத்தின் மீது கட்டமைக்கப்பட்டதல்லவா! அதன் தொடர்ச்சிதான அன்னை அவர்களுடனான திருமணமும்! பிற்கால வாழ்க்கையில் அன்னை கதீஜா நாயகி அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அளித்த ஆதரவு இதனை உறுதிபடுத்துகிறது. இறுதிநாள் வரை தொடுக்கப்படும் திருமணம் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் இந்த பந்தம் விடையாகவும் அமைந்துள்ளது.

இருபத்தைந்து வயதான நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நாற்பது வயதான அன்னை கதீஜா ரழியல்லாஹு அன்ஹா அவர்களை திருமணம் செய்தார்கள். அன்னை அவர்களின் மரணம் வரை இருபத்தைந்து ஆண்டுகள் அந்த இனிய உறவு எந்தவிதக் கீறலுமின்றி முழு திருப்தியுடன் தொடர்ந்தது.

இந்தக் கால அளவில் பலதார மணம் பரவலாக இருந்த அரேபியாவில் இன்னொரு திருமணத்தை அவர்கள் எண்ணிப் பார்க்கவே இல்லை. ஒருவரின் இருபத்தைந்து வயது முதல் ஐம்பது வயது வரையுள்ள இளமைப் பருவம், நாற்பது முதல் அறுபத்தைந்து வரை பிராயமுள்ள மனைவியுடன் எந்தப் பிணக்கமுமின்றி உள்ளார்ந்த அன்புடன் கழிகிறது. இப்படிப்பட்ட ஒருவரை அதீத பெண் மோகம் கொண்டவர் என குற்றஞ்சாட்டுபவர்கள் எந்த உலகில் வாழ்கின்றனர்?

ஓரியன்டலிஸ்டுகள் காணும் குறை வேறு. முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்னை கதீஜா நாயகி அவர்களின் செல்வத்தை விரும்பி அவரைத் திருமணம் செய்துக் கொண்டார்கள் என்கின்றனர். இந்த குற்றச்சாட்டுக்கு எந்தவிதமான வரலாற்று அடிப்படையும் இல்லை. ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வில் ஒருமுறைகூட பணப் பேராசை வெளிப்படும் எந்தவொரு சிறு நிகழ்வையும் மேற்கோள் காட்டவே முடியாது. அன்னை கதீஜா நாயகி ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் செல்வம் ஏகத்துவ அழைப்புப் பணிக்காக செலவிடப்பட்டது என்பது உண்மை. இது தவிர ஆடம்பரமாக வாழவோ, அன்னையவர்களின் வணிக சாம்ராஜ்யத்தைக் கைப்பற்றவோ நபி அவர்கள் முயற்சிக்கவில்லை. விரும்பியதுமில்லை.

அரண்மனையும், சிம்மாசனமும், மணி மகுடமும் காலடியில் வீழ்ந்தபோதும் குடிசையையும், எளிமையையும் விரும்பி ஏற்று வாழ்ந்தவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். கிடைத்தவை அனைத்தையும் ஏழைகளுக்கு வழங்கி, தாராளத் தன்மையை ஊக்குவித்தார்கள்.. இளைஞராக இருந்தபோது ஆடு மேய்த்தலைத் தேர்ந்தெடுத்தார்கள். பின்னர் பெரிய தந்தையாரின் கோரிக்கையை ஏற்று வணிகத் துறைக்கு வந்தார்கள். அதன் மூலம் கிடைத்த சொத்து முழுவதும் பெரிய தந்தையாரின் குடும்பச் செலவுக்காகப் பயன்படுத்தினார்கள்.

அன்னை கதீஜா நாயகி அவர்களுடனான திருமணம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தரப்பிலிருந்து முன்னெடுக்கப்படவில்லை. அப்படிக் குறிப்பிடும் எந்த வரலாற்றுப் பதிவுகளும் இல்லை. முழுக்க முழுக்க அன்னை அவர்களின் தரப்பிலிருந்து முன்னெடுக்கப்பட்டதோர் திருமணம் ஆகும். உடல், பொருள், ஆவி அனைத்தையும் இறைப் பணியை நிறைவேற்ற மட்டுமே பயன்படுத்தினார்கள். இவ்வாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கையை ஆய்வு செய்தால் அவர்களிடம் தன்னலம் கருதாத ஒரு தியாகியைக் காணலாம்.

ஒரு கன்னிப் பெண்ணைத் திருமணம் செய்திட வாகான இளம் பருவத்தில், தமது இறைப் பணிக்கு பயன்படுத்த பக்குவமும், அனுபவமும் மிகுந்த, இரட்டை விதவையும், ஐந்து குழந்தைகளின் தாயுமான நாற்பது வயதுடைய பெண்மணியை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்டார்கள். அண்ணல் நபி அவர்களின் மகத்தான இம்முடிவை வரலாறு மிகுந்த பெருமையோடு வாசித்து மகிழ வேண்டும்!

அன்னை கதீஜா நாயகி அவர்களின் பணத்துக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆசைப்பட்டதாக எழுதியவர்கள் தாங்களாகவே பதிவு செய்த சில உண்மைகளை மறந்து விட்டனர். அன்னை அவர்களின் மேன்மை, நுண்ணறிவு, அழகு, சமயோசிதம், கூர்ந்த மதி, வாழ்க்கை அனுபவங்கள் என்று நீளும் பட்டியல் தான் அவை!

இனி திருமண நாட்கள்………

நிச்சயிக்கப்பட்ட திருமண ஏற்பாடுகள் பற்றிய ஆலோசனைகள் நடந்தன. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தரப்பிலிருந்து அபூதாலிப் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். மணமகள் வீட்டில் வைத்து திருமணம் நடத்தலாம் என நிச்சயிக்கப்பட்டது. மணமகனும், உறவினர்களும் மணமகளின் இல்லத்துக்குச் சென்று திருமண உறுதிமொழி எடுக்கலாம் என இருதரப்பினரும் ஒப்புக் கொண்டனர்.

Mahabba Campaign Part-28/365

அபூதாலிப் நகரப் பிரமுகர்களுக்கு அழைப்பு விடுத்தார். மக்காவைச் சார்ந்த பத்து பிரமுகர்கள் மணமகனுடன் மணமகள் வீட்டுக்கு வந்தனர். திருமணம் நடைபெறும் இடம் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. மணமகளின் குடும்பத்தைச் சார்ந்த முக்கிய பிரமுகர்களும் நிகழ்வில் கலந்துக் கொண்டனர். வேத விற்பன்னர் வரகத் பின் நவ்ஃபல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

முதலாவதாக அபூதாலிப் கீழ்க்கண்டவாறு திருமண உரை நிகழ்த்தினார். “எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே! அவன் எம்மை இப்ராஹீம் சந்ததிகளிலும், இஸ்மாயீலி பரம்பரையிலும் இணைத்துள்ளான். நாங்கள் மஅத் வம்சத்திலும், முளர் பரம்பரையிலும் இருக்கின்றோம். அல்லாஹ் நம்மை அவனது இல்லத்தின் பாதுகாவலர்களாகவும், ஹரமின் காவலர்களாகளாவும் தேர்ந்தெடுத்துள்ளான். அவன் எங்களுக்குப் பாதுகாப்பான புனித நகரத்தையும், பயணிகள் வரும் புனித இடத்தையும் தந்தான். நாங்கள் மக்கள் மத்தியில் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளோம்.

எனது சகோதரர் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அனைத்து துறைகளிலும் எந்தவொரு இளைஞரை விடவும் சிறந்த ஆளுமை கொண்டவர். யாருடன் அவரை ஒப்பிட்டாலும் அவர் முன்னிலை வகிப்பார். மகத்துவம், திறமை, புத்திசாலித்தனம் என்று எதில் பார்த்தாலும் அவரே முன்னவராக இருப்பார். ஆனால் செல்வத்தில் கொஞ்சம் பின்தங்கி இருக்கலாம். செல்வம் என்பது அசையும் நிழலும், திருப்பிச் செலுத்த வேண்டிய கடனும் அல்லவா! நான் அறிவிக்கின்றேன், என்னுடைய சகோதர புத்திரருக்கு எல்லாவற்றையும் மிஞ்சும் ஒரு நற்செய்தி வரும், அவருக்கு ஒரு முக்கியமான விஷயம் வரப்போகிறது.

என்னுடைய சகோதர புத்திரர் உங்களுடைய பெருமைமிக்க மகள் கதீஜாவை மணக்கின்றார். மணமகளுக்கு வழங்கப்படும் மஹர் (திருமணக் கொடை) பன்னிரண்டரை ஊகியா (500 திர்ஹம்) தங்கம் ஆகும்.”

அபூதாலிபின் உரை முடிந்ததும், மணமகள் தரப்பிலிருந்து அம்ர் அஸத் எழுந்தார். அவர் அன்னை கதீஜா நாயகி அவர்களின் தந்தை வழி மாமா ஆவார். “தாங்கள் கூறிய இளைஞர் ஒரு முழுமையான ஆளுமை கொண்டவர். எனவே தங்களின் கோரிக்கையை நிராகரிக்க இயலாது. நாங்கள் கதீஜாவை முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குத் திருமணம் செய்து தருகின்றோம்.” என்றார்.

தொடர்ந்து வேத அறிஞர் வரகத் பின் நவ்ஃபல் உரை நிகழ்த்தினார். “எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே சொந்தம். நீங்கள் சொன்ன அனைத்து பதவிகளையும் அல்லாஹ் எங்களுக்கும் வழங்கியுள்ளான். நாங்கள் அரேபியர்களின் தலைவர்கள் மற்றும் உயர் குடும்பத்தினர். நீங்களும் எங்களைப் போன்று அதற்குத் தகுதியானவர்கள். அரேபியர்கள் உங்களை பெருமை பாராட்டத் தவற மாட்டார்கள். உங்களுடைய சிறப்பையும், கம்பீரத்தையும் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். உங்கள் மாட்சிமை மற்றும் குடும்பத்துடன் இணைய விரும்புகின்றோம். குறைஷிகளே! நீங்கள் அனைவரும் சாட்சிகள். அப்துல்லாஹ் அவர்களின் மகன் முஹம்மத் அவர்களுக்கும், குவைலிதின் மகள் கதீஜா அவர்களுக்கும் இடையே மேற்கூறிய மஹருக்கு (திருமணக் கொடை) திருமணம் நடந்ததை அறிவிக்கின்றேன்.”

அபூதாலிப் இடைமறித்து, “மணமகளின் மாமாவும் ஒப்பந்தத்தை அறிவிக்க வேண்டுமென விரும்புகின்றேன்” எனக்கூற, அம்ர் பின் அஸத் எழுந்து “குறைஷிகளே! நீங்கள் அனைவரும் சாட்சி. அப்துல்லாஹ் அவர்களின் மகன் முஹம்மத் அவர்களும், குவைலிதின் மகள் கதீஜா அவர்களும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்” என்று கூறினார்.

அன்னை கதீஜா நாயகி ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் மனம் மகிழ்ச்சியால் நிறைந்தது. பூமியில் ஒரு பெண்ணுக்கு கிடைக்கக்கூடிய மிகப் பெரும் பாக்கியத்தை அவர் பெற்றிருக்கிறார். விதவையின் சோகமோ, தாய்மையின் சோர்வோ இல்லை. கிடைத்த நற்பேறின் மகிழ்வில் மணமகனை வரவேற்கத் தயாரானார்.

மக்காவாசிகள் அனைவரும் கொண்டாட்டத்தில் பங்கு சேர்ந்து மகிழ்ந்தனர். அன்னையவர்களின் தோழியர் தஃப் இசைத்து பாடல்கள் பாடினர். “குறைஷிப் பெண்களின் தலைவிக்கு அல்அமீன் என்ற மாப்பிள்ளை கிடைத்துள்ளார். எல்லா இடங்களிலும் நற்பேறு என்று பாடினர். கவிஞர்கள் வாழ்த்துப் பாக்கள் எழுதினர். பலர் கவிதைகள் வாசித்தனர்.

“லா தஸ்ஹதீ கதீஜு ஃபீ முஹம்மதீ – நஜ்முன் யுழீஉ கமா அழா அல்ஃபர்கது
ஓ கதீஜா! ஃபர்கத் நட்சத்திரம் போல ஒளிரும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பரவசத்துடன் அனுபவிப்பதில், ரசிப்பதில் தயக்கம் காட்ட வேண்டாம் என்பது அவர்கள் பாடிய கவிதை வரிகளில் ஒன்று

Mahabba Campaign Part-29/365

மிகச் சிறப்பாக திருமணம் நடைபெற்றதில் அபூதாலிப் மிக அகமகிழ்ந்தார். இறைவனைப் புகழ்ந்து அவர் இவ்வாறு கூறினார் “அல்லாஹ்வுக்கே அனைத்து புகழும். அவன் நம்முடைய கஷ்டங்களை அகற்றினான். துன்பங்களை லேசாக்கினான்.”

திருமணத்தையொட்டி மணமகள் இல்லத்தில் சிறப்பானதொரு விருந்து நடைபெற்றது. பசுவை அறுத்து உணவு தயாரித்தனர். நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரண்டு ஒட்டகங்கள் அறுத்து வலீமா விருந்து வழங்கினார்கள்.

நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனைவி அன்னை கதீஜா நாயகி அவர்களுக்கு உயர்வான மஹர் வழங்கினார்கள். இருபது ஒட்டகங்கள் மஹராக வழங்கப்பட்டதாகவும் ஒரு கருத்து உண்டு. வாக்குறுதியளிக்கப்பட்ட மஹர் 500 திர்ஹம் (பன்னிரண்டரை ஊகியா). பின்னர் இந்த மஹருக்குச் சமமான மதிப்புள்ள இருபது ஒட்டகங்கள் வழங்கப்பட்டிருக்கலாம் என இரண்டு கருத்துகளையும் இணைத்தும் வாசிக்கலாம்.

அன்னை கதீஜா நாயகி அவர்களை திருமணம் செய்துக் கொண்டதன் மூலம் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குக் கிடைத்தது வெறும் ஒரு மனைவி மட்டுமல்ல! பக்குவம் நிறைந்த முதிர்ந்த ஒரு துணையை ஆகும். அவர்கள் பரஸ்பரம் அன்பும், மரியாதையும், அக்கறையும் செலுத்தி ஈருடல் ஓருயிராய் இணைந்து வாழ்ந்தனர்.

இருபத்தைந்து வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கன்னிப் பெண்ணான அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் உட்பட வேறு பலரை மணந்தார்கள். எனினும் நபி பெருமான் அவர்கள் அன்னை கதீஜா நாயகி அவர்கள் மீதான அன்பையும். நினைவுகளையும் தமது வாழ்க்கையின் இறுதிவரை நினைவுகூர்ந்தார்கள்.

நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருமணத்துக்குப் பிறகும் வியாபாரத்தில் ஈடுபட்டார்கள். அதை உறுதி செய்யும் சில சம்பவங்கள் உள்ளன.

மக்காவின் முக்கியமானவர்களில் ஒருவரான உமையத் பின் அபீஸ்ஸல்த் தனது நண்பரான அபூஸுஃப்யானுடனான உரையாடலின்போது சொன்னார் “நான் ஒரு வணிகப் பயணத்தை முடித்துக் கொண்டு எமனிலிருந்து ஊர் திரும்பினேன். அனைவரும் என்னை அணுகி வாழ்த்துத் தெரிவித்தனர். என்னை நம்பி சரக்குகள் ஒப்படைத்தவர்கள் தமது லாபப் பங்கைக் கேட்டனர். இந்தக் குழுவில் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் இருந்தார்கள். அவர்கள் என்னை வாழ்த்தி, என் உடல்நிலை மற்றும் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து பேசினார்கள். ஆனால் வர்த்தக லாபத்தைப் பற்றி எதுவும் கேட்காமல் என் வீட்டிலிருந்து திரும்பிச் சென்றார்கள். அருகிலிருந்த எனது மனைவி ஹிந்த், “என்ன அதிசயம்! ஒவ்வொருவரும் தமது லாபப் பங்கைத் தேடி வந்தனர். ஆனால் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மட்டும் உங்கள் நலம் பற்றி விசாரித்து விட்டு திரும்பிச் செல்கிறார்கள்” என்று கூறினார்.”

உமையா சொன்னதைக் கேட்ட அபூஸுஃப்யான் கூறினார்கள் “எனக்கு அவர்களுடன் சில வர்த்தக அனுபவங்கள் உள்ளன. நான் ஒரு வணிகப் பயணத்துக்குப் பின் கஃபாவை தவாஃப் செய்ய வந்தேன். அங்கு நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவர்களிடம் “நீங்கள் ஒப்படைத்த பொருட்களுக்கு நல்ல லாபம் கிடைத்தது. என் வீட்டுக்கு ஒருவரை அனுப்புங்கள், லாபத் தொகையைக் கொடுத்தனுப்புகின்றேன். லாபத்தில் எனக்கான விகிதத்தைத் தாங்கள் தர வேண்டாம்” என்று சொன்னேன். “இல்லை! என்னிடமிருந்தும் தங்களுக்கான லாப விகிதத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு லாப விகிதத்தை எடுப்பதாக இருந்தால்தான் ஆளனுப்புவேன்.” என்று அவர்கள் சொன்னதை ஒப்புக் கொண்டேன். ஆளனுப்பினார்கள். லாபத்தில் எனது விகிதத்தைக் கழித்து அவர்களது பங்கைக் கொடுத்தனுப்பினேன்.

திருமணத்துக்குப் பின் தன்னிறைவுடன் குடும்ப வாழ்க்கையை நடத்தினார்கள் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். தமது சொந்த வாழ்க்கை மூலம் வர்த்தக விவகாரங்களின் நீதி மற்றும் நியாயத்தை எடுத்துக் காட்டினார்கள். அன்னை கதீா நாயகி அவர்களுடனான நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமணம் நபியவர்களின் வாழ்க்கை நிலையை மெச்சப்படுத்தியது. மகிழ்வான திருமண வாழ்க்கையை அவர்கள் இருவரும் வாழ்ந்தனர்.

அன்னை அவர்களின் கனவுகள் விதவை உலகத்திலிருந்து விடுபட்டு வேறு பல வெற்றிகளைத் தேடி சஞ்சரித்தன. நம்பிக்கையின் புதிய நாட்களுக்காக அவர்கள் ஆவலோடு காத்திருந்தார்கள். தனது அன்புத் துணைவரின் அனைத்து செயல்பாடுகளுக்கும் பக்க பலமாக இருந்தர்கள். நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கணவராகப் பெற்ற பிறகு அன்னை கதீஜா நாயகி அவர்கள் மக்காவில் மேலும் அதிகமாக மதிக்கப்பட்டார்கள்.

Mahabba Campaign Part-30/365

மகிழ்ச்சியான திருமண வாழ்வின் வசந்த காலத்தில் தாம்பத்தியத் தோட்டத்தில் மலர்கள் மொட்டிடத் துவங்கின.
அன்னை கதீஜா நாயகி ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கருவுற்றபோது இருவரும் மகிழ்ச்சி மீக்குற்றனர். வரலாற்றின் உறுதியான தகவலின்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கதீஜா ரழியல்லாஹு அன்ஹா தம்பதியருக்கு இரண்டு ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் என ஆறு குழந்தைகள் பிறந்தன.

முதலில் பிறந்த மகனுக்கு அல்காஸிம் என்று பெயர். அதன் காரணத்தால் அபுல்காஸிம் — காஸிமின் தந்தை என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழைக்கப்பட்டார்கள். அதிக நாட்கள் அன்புச் செல்வத்தை சீராட்ட முடியவில்லை. இரண்டு வயதாக இருக்கும்போது காஸிம் இறந்து விட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறக்கும்போதே தந்தையை இழந்த அனாதையாகவும், ஆறாம் வயதில் தாயாரின் மரணத்தையும் தாங்கிக் கொண்டவர்களல்லவா தாஹா நபி அவர்கள்! இப்போது மூத்த மகன் குழந்தைப் பருவத்திலேயே இறந்த சோகத்தையும் தாங்கிக் கொண்டார்கள். ஓர் அடிமை தனது எஜமானனின் விதி நிர்ணயங்களுக்கு எவ்வாறு கட்டுப்பட வேண்டும் என்பதை அவர்கள் தன் சொந்த வாழ்க்கையில் கடைபிடித்துக் காட்டினார்கள். அன்புத் துணைவரை அன்னை அவர்கள் ஆறுதல்படுத்தினார்கள். “காஸிம் அவர்கள் இரண்டு வயதில் மறையவில்லை, அவர் ஒட்டகத்தில் ஏறுவதற்கான வயது வந்த பிறகுதான் மறைந்தார்” என்றதொரு கருத்து வரலாற்றில் உண்டு.

இரண்டாவதாகப் பிறந்தவர் மகள் ஜெய்னப் என்பது பிரபலமான கருத்து. அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வயது முப்பது என இப்னு அப்துல்பர் பதிவு செய்துள்ளார்கள். ஜெய்னப் ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் பெற்றோரின் அரவணைப்பில் மகிழ்வுடன் வளர்ந்தார். அவர் வளர்ந்ததும் திருமணம் செய்து கொடுக்கப்பட்டார். மணமகன் : அன்னை கதீஜா நாயகி அவர்களின் மாமாவின் மகன் அபுல் ஆஸ் பின் ரபீஆ அவர்கள். இவர்களுக்கு அலீ என்ற மகனும், உமாமா என்ற மகளும் பிறந்தனர். இவர்களில் அலீ இளம் பருவத்திலேயே இறந்து விட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகள் ஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் மறைவுக்குப் பின் உமாமா அவர்களை அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மணந்துக் கொண்டார்கள். இது ஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் ஏற்கனவே கேட்டுக் கொண்டதற்கிணங்க, நடைபெற்ற திருமணமாகும்.

ஜெய்னப் ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் ஆரம்ப கட்டத்திலேயே இஸ்லாமை ஏற்றுக் கொண்டார். ஆனால் அபுல் ஆஸ் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவில்லை. பத்ர் யுத்தத்தின்போது முஸ்லிம்களின் எதிரணியில் நின்று போரிட்ட அவர், போரில் வெற்றி கொண்ட முஸ்லிம்களால் கைது செய்யப்பட்டார். அவர் விடுவிக்கப்பட்ட பிறகுதான் ஜெய்னப் ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் மதீனாவுக்குச் சென்றிட அனுமதித்தார்.

வருடங்கள் கழிந்தன. அபுல்ஆஸ் இஸ்லாமை ஏற்றுக் கொண்டார். ஜெய்னப் ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் தம் கணவருடன் வாழ்ந்தார்கள். ஆனால் அது நீண்ட காலம் நீடிக்கவில்லை. ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு ஜெய்னப் ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் உலகை விட்டுப் பிரிந்தார்கள். (அபுல் ஆஸின் வரலாற்றை பின்னர் விரிவாகப் பார்க்கலாம், இன்ஷா அல்லாஹ்!)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முப்பத்து மூன்றாம் வயதில் மூன்றாவது குழந்தை ருகிய்யா ரழியல்லாஹு அன்ஹா பிறந்தார்கள். அவர்கள் அபூலஹபின் மகன் உத்பாவை மணந்தார்கள். ஆனால் வெகு விரைவிலேயே தந்தை அபூலஹபின் வற்புறுத்தலின் பேரில் உத்பா அவர்களை விவாகரத்துச் செய்தார். பின்னர் உதுமான் பின் அஃப்பான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ருகிய்யா அவர்களை மறுமணம் செய்துக் கொண்டார்கள்.

ஆரம்ப நாட்களில் ருகிய்யா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் இஸ்லாமைத் தழுவி மதீனா சென்றார்கள். அவர்களுக்கு உதுமான் பின் அஃப்பான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலமாக அப்துல்லாஹ் என்ற ஆண்மகவு பிறந்தது. ஆனால் இக்குழந்தை தமது ஆறாவது வயதில் இம்மை வாழ்வை முடித்துக் கொண்டது. ஹிஜ்ரி இரண்டாமாண்டு நடைபெற்ற பத்ருப் போருக்குப் பின்னர் ருகிய்யா ரழியல்லாஹு அன்ஹா மதீனாவில் வைத்து மரணமடைந்தார்கள். அப்போது அவர்களுக்கு வயது இருபது. ருகிய்யா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் முதற் கணவரான உத்பா மக்கா வெற்றியின்போது இஸ்லாமைத் தழுவினார்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நான்காவது குழந்தை உம்மு குல்தூம் ரழியல்லாஹு அன்ஹா அவர்கள். அபூலஹபின் இன்னொரு மகனான உதைபாவைத் திருமணம் செய்துக் கொண்டார்கள். தேனிலவுக்கு முன்பே தந்தை அபூலஹின் வற்புறுத்தல் காரணமாக உம்மு குல்தூம் அவர்களை உதைபா விவாகரத்துச் செய்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எதிர்ப்பதில் உதைபா அதிக தீவிரம் காட்டினார். எரிச்சலூட்டும் செயல்களைச் செய்தார். பின்னர் அதற்கான மோசமான விளைவுகளையும் அவர் சந்தித்தார்.

ருகிய்யா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் மவ்த்துக்குப் பிறகு உம்மு குல்தூம் ரழியல்லாஹு அன்ஹா அவர்களை உதுமான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹிஜ்ரி மூன்றாம் ஆண்டு ரபீவுல் அவ்வல் மாதத்தில் திருமணம் செய்துக் கொண்டார்கள். உம்மு குல்தூம் ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் ஹிஜ்ரி ஒன்பதாம் ஆண்டு ஷஃபான் மாதத்தில் இறையடி சேர்ந்தார்கள். இந்நேரத்தில நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உதுமான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைப் புகழ்ந்து “எனக்கு பத்து மகள்கள் இருந்தால் அவர்களை ஒவ்வொருவராக உதுமானுக்குத் திருமணம் செய்து கொடுப்பேன்!” என்று கூறினார்கள்:

 

Leave a Reply